பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
29


"அம்மா முத்துமணி வீட்டைவிட்டு ஓடிவிட்டாள். தங்கம்மாள் அதே ஏக்கமாக நோயுடன் இருக்கிறார் கள். நாளுக்குநாள் காய்ச்சல் அதிகமாகிக் கொண்டு வருகிறது. முத்துமணி முத்துமணி என்று எப்பொழு தும் பிதற்றுகிறார்கள் முத்துமணியைப் பார்க்காவிட் டால் இறந்து விடுவார்கள் என்று மருத்துவர்கள் கூறு கிறார்கள். முத்துமணி இங்குவந்திருந்தால் அவளைக் கூட்டிக் கொண்டு உங்களை உடனே புறப்பட்டுவரச் சொன்னார்கள்?’ என்றான் அந்த வேலைக்காரன்.

இரக்க மனம்படைத்த கண்ணம்மாள், முத்துமணி யை யும் கூட்டிக்கொண்டு கண்ணப்பருடன், அதே குதிரை வண்டியில் ஏறிப் புறப்பட்டாள், பச்சைக் கிளியும் அவர்களுடன் புறப்பட்டது. அன்று மாலை குதிரை வண்டி பொன்னப்பர் வீட்டின் எதிரில் வந்து நின்றது.

எல்லாரும் இறங்கி உள்ளே சென்றார்கள். தங்கம் மாள் ஒர் அறையில் படுத்த படுக்கையாகக் கிடந்தாள். முத்துமணி, அம்மா’’ என்று சொல்லிக் கொண்டு அருகில் சென்றாள்;" வந்துவிட்டாயா கண்ணே! இனி நான் பிழைத்துவிடுவேன்" என்று மகிழ்ச்சி யுடன் சொன்னாள் தங்கம்மாள்!

பொன்னப்பர் கண்ணப்பரைப் பார்த்து," இனி நீங்களும் இங்கேயே இருந்துவிடுங்கள். உங்களைப் பிரிந்து முத்துமணியால் இருக்க முடியாது.