பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
31

புற்கள்

'

அடித்த தம்பட்டம்

ஒரு பெரிய பூங்கா இருந்தது. அந்தப் பூங்காவின் நடுவில் அழகான புள்வெளி ஒன்று அமைந்திருந்தது.

அந்தப் புல்வெளி பார்ப்பதற்கு மிக அழகாக அமைந்திருந்தது. பச்சைப்பசேல் என்று பட்டுக் கம்பளம் விரித்தது போல், கதிரவன் ஒளிபட்டு கண்ணுக்குக் குளிர்ச்சியாய் இருந்தது.

அந்தப் புல்வெளியில் வளர்ந்திருந்த புற்களுக்குத் தற்பெருமை மிகுதியாயிருந்தது. அந்தப் புற்கள் நெருங்கியிருந்து தலைநிமிர்ந்து நிற்கின்ற தோற்றமே அவற்றின் தற்பெருமையை விளக்குவதாயிருந்தது.

தங்கள் அழகைப் பற்றிய தற்பெருமையோடு அவை வாழ்ந்து கொண்டிருந்தன. தங்கள் பெருமையை நினைத்து அவை கலகல வென்று சிரித்துக் கொண்டன,

ஒருநாள் அந்தப் புற்கள் கலகல வென்று தங்களுக்குள் பேசிக் கொண்டன.