பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

இந்த உல்கத்தில நம்மைப்போல் அழகானவர்கள் யார் இருக்கிறார்கள்?"என்று கேட்டது ஒரு புல்,

"மரப்பச்சை கூடத் தூரத்து அழகுதான். நாம் பக்கத்திலிருந்து பார்த்தாலும் அழகு தூரத்திலிருந்துபார்த்தாலும்அழகு"என்றது இன்னொரு புல்.

"பூக்களுக்கு ஒருநாள் தான் அழகு இருக்கும். மறுநாள் வாடிப்போகும், நம் அழகு, ஒவ்வொரு நாளும் மிகுந்து கொண்டிருக்க வல்லது" என்றது மற்றொரு புல்.

"பூச்சைக் கம்பளம் விரித்தாற்போல் நாம் இருப்ப தாகக் கவிஞர்கள் பாடுகிறார்கள், ஆனால், வானம் கூட நீலக் கம்பளம் விரித்தாற்போல் இருக்கிறது இல்லையா?" என்று பூங்காவின் ஓரத்தில் இருந்த புல் ஒன்று கேட்டது.

"அசடே வானத்து நீல நிறம் மங்கலானது. அத்துடன் மேகக் கூட்டம் இடையிலே புகுந்து விட்டால் அது திட்டுத்திட்டாய்ப் படை வந்தது போல் இருக்கும். நம் அழகு பளிச்சிடும் அழகு!" என்று விளக்கம் தந்தது ஒரு நீண்ட புல்.

இவ்வாறு அவை பேசிக் கொண்டிருந்ததை வானம் கேட்டுக்கொண்டிருந்தது.

"இந்தப் புற்கள், தம்மை மறந்து தம்பட்ட மடித்துக் கொண்டிருக்கின்றனவே!" என்று வியப்