பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

மழை பெய்து தரை குளிர்ந்தும் புற்கள் மீண்டும் தலைதூக்கின. இப்பொழுது தலை நிமிர்ந்து நின்ற அந்தப் புற்களின் தோற்றத்திலே தற்பெருமையில்லாத ஓர் அழகு நிறைந்து விளங்கியது.

இந்தக் கற்பனைக்குக் காரணமான குறள்,

விசும்பின் துளிவிழின் அல்லால் மற்றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது

--திருக்குறள்