பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
40

40

யார் அவனுக்கு எவ்வாறாவது உதவி செய்ய எண்ணினார்,

ஊரில் புகழ் பெற்ற வள்ளலைப் பற்றி அவரும் கேள்விப் பட்டிருந்தார். தானமென்றும் தருமமென் றும் வாரிக் கொடுக்கின்ற வள்ளல், கடன் கொடுக் கவா மறுக்கப் போகிறார் என்று அவருடைய வெள்ளை யுள்ளம் எண்ணியது.

ஒருநாள் மானாக்கனைக் கூட்டிக் கொண்டு வள்ளலைக் காணச் சென்றார். அன்று வள்ளல் எபேசா நோன்பு கடைப்பிடிப்பதால் யாரும் பார்க்க முடியாது என்று அங்கிருந்த மேலாளர்கள் கூறி விட்டனர். -

மற்றொரு நாள் சென்றபொழுது, அன்று வள்ளல் வெளியூருக்குப் புறப்பட்டுக் கொண்டிருப்பதால் காண முடியாது என்று அம்மேலாளர்கள் கூறி விட்டனர்.

இப்படிப் பத்துமுறை முயன்று கடைசியில் அவர் கள் வள்ளலைப் பார்க்க வழிவிட்டார்கள். வள்ளலிடம் தங்கள் கோரிக்கையைக் கூறும்போது, அந்த வள்ளல், தான் பொதுநிறுவனங்களுக்குத்தான் கொடைகொடுப் பது வழக்கம் என்றும், தனிப்பட்டவர்களுக்குக் கொடுப்பதில்லை என்றும் கூறிவிட்டார். தாங்கள் தானம் வாங்க வரவில்லை என்றும் கடனுதவிக் காகவே வந்திருப்பதாகவும் புலவர் எடுத்துக் கூறினார். கடன் கொடுப்பதற்கென்று வணிகர்கள்