பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
42

42

அந்த வள்ளலின் மற்றோர் ஆள் மருத்துவ ருடைய வீட்டுக்குச் சென்றார். புலவர் வெள்ளுடை யாரின் மருத்துவச் செலவு முழுவதும் வள்ளலே ஏற்றுக் கொள்வதாகச் சொல்லியனுப்பியிருப்பதாகக் கூறினார்.

புலவர் வெள்ளுடையாருக்குத் தாம் காசுக்காக மருத்துவம் பார்க்கவில்லை என்றும், அன்புக்காகவே பார்ப்பதாகவும் கூறி மருத்துவர் தொகை பெற மறுத்து விட்டார். ஆனால் அத்த ஆள் மருத்துவரின் மருத்துப் பெட்டியின் மீது ஆயிரம் ரூபாயை வைத்து விட்டு, அவர் அதைப் பெற்றுக் கொள்ளத்தான் வேண் டுமென்று கூறி அங்கிருந்து அகன்று போய்விட்டார்.

அந்த மருத்துவர் அந்தப் பணம் முழுவதையும் எடுத்துக் கொண்டு போய்க் கோயில் உண்டியலில் போட்டு விட்டுப் புலவர் வெள்ளுடையாரைப் பார்க்கச் சென்றார்.

மருத்துவர் சென்ற பொழுது, புலவர் வெள்ளுடை யாரின் மாணவர் ஒருவர் புலவருடன் பேசிக் கொண்டி ருந்தார்.

ஜெயா, தங்கள் மருத்துவச் செலவு முழுவதை யும் வள்ளலே ஏற்றுக் கொண்டிருப்பதாக ஊரில் பேசிக் கொள்கிறார்களே, அவ்வளவு செலவழித்துப் பார்க்க வேண்டிய கடுமையான நோயா தங்களுக்கு வந்துவிட்டது?’ என்று அந்த மாணவர் கவலை யோடு கேட்டார்.