பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

தோன்றிய முருகன், மயில் சொன்னபடி செய் என்று சொல்வது போல் இருந்தது. ஆண்டவனை வணங்கிய பின் கண்ணன் வீட்டுக்குத் திரும்பினான்.

தன் மனைவி வள்ளியிடம் மயில் சொன்ன செய்தியைக் கூறினான். வள்ளி அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களிடம் இந்தச் செய்தியைச் சொன்னாள்.

போலப்பட்டிப் பண்ணையார் மகன் கந்தசாமி பெரும் குடிகாரன். அவன் கூட்டாளிகளோ படு முரடர்கள். அந்தக் கூட்டத்தைக் கண்டாலே குலை நடுங்கும். அப்படிப்பட்ட முரடனுக்குப் பச்சைக்கிளி போன்ற பொன்னியைக் கட்டிக் கொடுக்கலாமா? இது பெரும் பாவம்’ இப்படி எல்லாரும் கருத்துத் தெரிவித் தார்கள்.

வள்ளி கண்ணனிடம் நம் பெண்ணையாராவது ஏழைப் பையனுக்குக் கொடுத்தாலும் கொடுக்கலாம்; அந்தக் கந்தசாமிக்கு வேண்டவே வேண்டாம்?’ என்று கூறினாள். இதைக் கேடடதும் கண்ணனுக்கு மேலும் குழப்பமாய் இருந்தது. நினைத்துப் பார்க்கப் பார்க்க வள்ளி சொல்வதே சரி என்று தோன்றியது. அந்தக் கோயில் மயில் மேல் கோபம் கோபமாக வந்தது. முருகனிடம் வரம் கேட்க தெய்வமே என்று பேசாமல் சென்ற என்னை வழி மறித்து இந்த மயில் தவறான ஒரு வழியைக் காட்டி விட்டது என்று வருந்தினான்; மறுபடி கோயிலுக்குப் போகும்போது அந்த மயிலோடு பேசக் கூடாது என்று உறுதி செய்து கொண்டான்.