பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நான்கு குருவிகள்

ஒரு காட்டில் சிட்டுக் குருவி ஒன்று இருந்தது. சின்னம் சின்னமாய் அதற்கு நான்கு குஞ்சுகள் இருந்தன.

ஒரு நாள் சிட்டுக் குருவி, தன் குஞ்சுகளுக்குச் சோறு ஊட்டிக் கொண்டிருந்தது. அப்போது அந்தக் குஞ்சுகளில் ஒன்று, "அம்மா, அம்மா என்னால் வெயிலைத் தாங்க முடியவில்லை” என்றது.

உடனே மற்றொரு குஞ்சு, "அம்மா அன்று ஒரு நாள் மழை பெய்த போது நான் தெப்பமாய் நனைந்து விட்டேன்" என்றது.

"நேற்று இரவு பனியில் படுத்திருந்ததால் எனக்குத் தடிமன் பிடித்துக் கொண்டது" என்றது மூன்றாவது குஞ்சு.

இவற்றை யெல்லாம் கேட்டதும் சிட்டுக் குருவிக்குக் கவலை வந்து விட்டது. குஞ்சுகள் உடல் நலமாய் இருக்க என்ன செய்யலாம் என்று அது நினைத்துப் பார்த்தது.