பக்கம்:பறவை தந்த பரிசு-2.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6


கவலையோடு அது சிந்தித்துக் கொண்டிருப்பதைக் கண்ட நான்காவது குஞ்சு, "அம்மா, எங்களுக்கு ஒரு வீடு கட்டித் தா அம்மா!" என்று கூறியது.

இதைக் கேட்டதும் அந்தச் சிட்டுக் குருவிக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. ஒரு சின்ன வீடு கட்டிவிட்டால் நன்றாக இருக்கும். வெயிலில் காயாமலும், மழையில் நனையாமலும், குளிரில் நடுங்காமலும், குஞ்சுகளோடு அந்த வீட்டில் இருக்கலாம். குஞ்சுகளுக்கும் காய்ச்சல் தடிமன் எந்த நோயும் வராது. கவலை ஒன்றுமில்லாமல் மகிழ்ச்சியோடு இருக்கலாம்.

இப்படியெல்லாம் நினைத்துப் பார்த்த அந்தச் சிட்டுக் குருவி உடனே வீடு கட்ட ஏற்பாடு செய்தது.

அந்தச் சிட்டுக் குருவி, சின்னஞ்சிறிய கூடை ஒன்றை எடுத்துக் கொண்டு வாய்க்காலுக்குச் சென்றது, வாய்க்கால் ஓரத்தில் இருந்த களிமண்ணை அந்தக் கூடை நிறைய அள்ளிக் கொண்டு வந்தது.

மறுபடியும் ஒரு வாளி எடுத்துக் கொண்டு அந்த வாய்க்காலுக்குப் போனது. வாளி நிறையத் தண்ணிர் மொண்டு வந்தது.

காட்டுக்குள்ளே கிடந்த சின்னச் சின்ன மரக்குச்சிகளை யெல்லாம் இழுத்துக் கொண்டு வந்தது.

களிமண்ணில் தண்ணிரை ஊற்றிக் குழைத்தது. குழைத்த களிமண்ணால் சுவர் எழுப்பியது. சுவரில்