பக்கம்:பறவை தந்த பரிசு-2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

“கண்ணா, நீயோ மிகுந்த ஏழை. உனக்கு இருக்கும் ஆசையோ மிகப் பெரிது. உன் ஆசை நிறைவேற வேண்டுமானால் நான் சொல்கிறபடி செய். பண்ணையார் தன் மகனுக்கு வேறு திருமணம் ஏற்பாடு செய்வதற்கு முன்னால் நீ அவரைப் போய்ப் பார்த்து விடு. காலத்தை நழுவவிடாதே. அன்றன்று நடக்க வேண்டியது நடக்கா விட்டால் எல்லாம் குழப்பமாகி விடும். நான் சொல்வதைக் கேள். பொன்னியின் எதிர்காலம் நன்றாக இருக்கும். எல்லாம் முருகன் செயல்” என்று கூறியது அந்த மயில்.

கண்ணன் முருகனை வணங்கிவிட்டுத் தன் வீடு சென்றான்.

வீட்டை அடைந்தவுடன் மனைவி வள்ளியிடம் அன்று நடந்த நிகழ்ச்சிகளைக் கூறினான். வள்ளியோ அவனைத் திட்டத் தொடங்கிவிட்டாள்.

“உங்களுக்கும் புத்தி இல்லை. அந்த மயிலுக்கும் புத்தியில்லை. பெண்ணைப் பெற்றுப் பச்சைக் கிளியைப் போல் வளர்த்து அந்தக் குடிகாரனிடம் கொண்டு போய்க் கொடுப்பதை விட என் பெண் திருமணம் ஆகாமலே இருந்து விட்டுப் போகட்டும். இனிமேல் அந்த மயிலின் பேச்சை எடுத்தால், எனக்குச் சினம் பொங்கி வரும். பேசாமல் இருங்கள்” என்று பொரிந்து தள்ளி விட்டு வள்ளி வறட்டி தட்டச் சென்று விட்டாள்.


-4-