பக்கம்:பறவை தந்த பரிசு-2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57

அந்தப் பையனை நிமிர்ந்து பார்த்த வள்ளி, நல்ல பையனாக இருக்கிறான். இவனைப்போல் ஒரு பையன் என் பொன்னிக்குக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தாள்.

அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே கண்ணனும் பண்ணையாரும் அவள் அருகில் வந்தார்கள்.

“வள்ளியம்மா, என் பையனுக்கு உன் பெண்ணைத் தர மறுக்கிறாயாமே?” என்று கேட்டுக் கொண்டே வந்தார் பண்ணையார்.

கேட்பவரோ பண்ணையார், பெரிய பணக்காரர். நேருக்கு நேர் முடியாதென்று எப்படிச்சொல்வது என்று திக்குமுக்காடிப் போனாள் வள்ளி.

அப்போது அந்த இளைஞனும் அவர்கள் அருகில் நெருங்கி வந்தான். அப்படிப்பட்ட இளைஞனைப் பார்த்தப் பிறகு அந்தப் பண்ணையாரின் குடிகாரப் பையனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று வள்ளி நினைத்தாள். வாய்விட்டுச் சொல்ல அவளால் முடியவில்லை.

அதற்க்குள் பண்ணையார் அந்த இளைஞனைச் சுட்டிக் காட்டி, “இதோ பார், இவன் தான் என் மகன். உன் பெண்ணை அருமையாக வைத்துக் கொள்வான். நீ சரி என்று சொன்னால் போதும்.திருமணத்திற்கு ஏற்பாடு செய்து விடுகிறேன்” என்று