பக்கம்:பறவை தந்த பரிசு-2.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

சிறுவர்களுக்காகக் கதை எழுதும் போது, எழுத்தாளர்கள் மனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று உண்டு, கதைகள், வெறும் நிகழ்ச்சிக் கோவையாக இல்லாமல், கற்பனை ஆக்கமாக இருத்தல் வேண்டும்.

குழந்தைகளின் பெரும் பொழுது கற்பனைக் காட்சிகளிலேயே கழிகிறது. அந்தக் கற்பனைகள் சூழ்லையை யொட்டி நல்லவையாகவும் அமையலாம்;

அல்லாதவையாகவும் தோன்றலாம். நூலாசிரியர்கள் தம் படைப்புகளில் நல்ல கற்பனைகளைப் படைப்பதன் மூலம், எதிர்காலச் சிற்பிகளை உயர் நோக்கம் உள்ளவர்களாக்க உதவ முடியும். அன்பு டைமை, பண்புடைமை, ஊக்கமுடைமை ஆக்கமுடைமை, அறிவுடைமை, திறனு டைமை என்ற இன்னோரன்ன ஆற்றல் களைப் பிஞ்சு நெஞ்சுகளில் தோன்றச் செய்தல் வேண்டும்.

உயர்ந்த கற்பனைத் திறத்துடன் : சிறந்த கதைகளைப் படைத்து வரும் கவிஞர் நாரா நாச்சியப்பன் அவர்கள் எழுதிய ஐந்து சிறந்த கதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. படித்த நெஞ்சில் படியும்படியான கதைகள். நல்லவை என்று போற்றும்படியான கதைகள். ஆவலை வளர்த்து அறிவைப் பெருக்கும் சித்திரக் கதைகள். இவை உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு ஏற்ற கதைகள்.

-தமிழாலயம்