பக்கம்:பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்

93


6. களைப்படைந்து விட்டோம் என்று நினைத்து விட்டால், உடனே பயிற்சியை நிறுத்தி விடுங்கள். இன்னும் உங்களுக்கு நேரம் உண்டு, நாட்கள் உண்டு, பிறகு செய்யலாம்.

7. கொதிக்கும் எண்ணெயில் அப்பளத்தைப் போட்டு உப்ப வைத்து விடுவது போல் அல்ல உடற்பயிற்சியும் உடம்பும்.

8. தொடர்ந்து ஒரு மாதம் பயிற்சி செய்தோமே! ஒன்றுமே பலன் தெரியவில்லையே! பலம் வரவில்லையே என்று உங்களுக்குச் சந்தேகம் வருகிறபோது. சந்தோஷமான நிலை என்ன என்று புரிந்து கொள்ள முயலுங்கள். எப்படி என்றால் இதோ இப்படித்தான்.

மாடிப் படிகளில் ஏறி இறங்கும்போது ஏற்படுகிற மூட்டு வலி சற்று மட்டுப்பட்டிருக்கிறதா?

ஏறி இறங்கும் போது ஏற்படுகிற பெருமூச்சும் பெரும் இரைப்பும் கொஞ்சம் குறைந்திருக்கிறதா?

வேகமாக நடக்கும்போது கூடதொடைத் தசைகள் உரசிக் கொள்ளாமல், கால்கள் பின்னிக் கொள்ளாமல் இயல்பாக நடக்க முடிகிறதா?

புறப்பட்டு விடுகிற பேருந்தை நோக்கி ஓடுகிறபோது தள்ளாட்டம் தடுமாற்றம் இல்லாமல் ஓட முடிகிறதா?

நெஞ்சிரைப்பு, நெஞ்சடைப்பு நேராமல் இருக்கிறதா?

ஒரு வேலையை ஆரம்பித்தவுடன் களைப்பு வருவதுபோல் இருந்த நிலையில், இப்போது களைப்பில்லாமல் பணியாற்றவும் கவனம் செலுத்தி விடவும் முடிகிறதா?