பக்கம்:பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்

95


அப்படிப்பட்ட உணர்வுடன் விருப்பத்துடன் ஆர்வத்துடன் ஆனந்தத்துடன் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

10. நிச்சயம் நமக்கு நல்ல பலத்தைத் தரும் என்ற நம்பிக்கையுடன் தான் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அந்த நம்பிக்கை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் தெரியுமா?

கல், முள் குத்தி விடக் கூடாது என்றுதான் காலில் செருப்பை அணிந்து கொண்டு தரையில் நடக்கிறோம்.

11. ஆனால், நாம் தண்ணீர்ப் பரப்பில் நடக்கும்போது செருப்பைக் கையில் பிடித்துக் கொண்டுதான் நடக்கிறோம். தண்ணீருக்குள் கல், முள் இருக்காது. நாம் காயப்படாமல் பத்திரமாகக் கடந்து விடுவோம் என்ற நம்பிக்கையை வைத்துக் கொள்வது.

12. ஒரு பேருந்தில் ஏறிக் கொண்டு பயணம் செய்கிறோம். அந்தப் பேருந்துப் பயணம் நம்மை நிச்சயமாக நாம் போகின்ற ஊருக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும்.

13. பேருந்தும் நல்ல நிலையில்தான் இருக்கும். அதை ஓட்டுகின்ற டிரைவர் கூட, நல்ல தேர்ச்சி பெற்ற ஓட்டுநராகத்தான் இருப்பார் என்று நாம் நம்புகிறோமே! அந்த நம்பிக்கையைப் போல!

முன் பின் தெரியாதவர் வீட்டுக்குப் போகிறோம். அல்லது தெரிந்தவர்கள் வீட்டுக்குப் போகிறோம். அவர்கள் உணவு அல்லது டீ, காபி போன்ற பானங்களை நமக்குத் தருகின்றார்கள்.

அதில் ஏதாவது கலந்திருப்பார்கள், நாம் சிக்கிக் கொள்வோம் என்ற சிறிதளவு கூட சந்தேகமோ மாற்றுச் சோதனையோ இல்லாமல் சாப்பிடுகிறோம். அந்த நம்பிக்கை போலத்தான். வாழ்வில் சந்திக்கும் பலப்பல சந்தர்ப்பங்களை நம்பிக்கையுடன் எதிர் கொள்வது போலத்தான்.