பக்கம்:பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


நீங்கள் செய்கிற உடற்பயிற்சியும் என்று நம்புங்க

உடற்பயிற்சி உங்களை சிரமப்படுத்தாது. சேதப்படுத்தாது. எதிர் மறை விளைவுகளை ஏற்படுத்தாது உங்களைப் பத்திரமாக வழிநடத்தும். வாழ்வை வளப்படுத்தும் தடை கல்லாக நிற்கும் நலிவுகளை அப்புறப்படுத்தும். வரும் நோய்களை வராமல் தடுக்கும் வந்த நோய்களிலிருந்து விரைவில் குணப்படுத்தும்.

ஆக, பலம் பெற வேண்டும் என்று புறப்பட்ட உங்கள் பயணத்தை வாழ்த்தித் தொடங்கி வைக்கிறோம்.

பலத்தோடு வாழ்வது புத்திசாலித்தனம்
நலத்தோடு வாழ்வது நாகரீகத்தனம்
வளத்தோடு வாழ்வது மனிதத்தனம், புனிதத்தனம்

இப்படிப்பட்ட தனங்களோடு, தனவான்களாக வாழ்கிற நாட்கள் வரை, வற்றாத இன்பச் செழிப்புடன் வாழ வேண்டும் என்று உங்களை வாழ்த்துகிறேன்.

உடற்பயிற்சி செய்வது ஒரு இன்பமான காரியம் பலன் என்ற பயன் பெறுவது, போனஸ் பெறுவது போல.

பயனுள்ளவைகளைச் செய்து பலசாலியாக குணசாலியாக வாழ்ந்து, பிறருக்கும் உதவி, உதவி பெற்று உவப்புடன் வாழுங்கள்.

ஒரு உன்னதமான வாழ்க்கை உங்களுக்காக காத்திருக்கிறது. பூத்திருக்கிறது.

தருவது இயற்கை. பெறுவது உங்கள் வாழ்க்கை.
இயற்கையைப் போல் வாழுங்கள்.
எல்லாமும் எல்லா நாளும் பெற்று வாழுங்கள்.
வெற்றியாளராக வாழுங்கள்.
என் இதய பூர்வமான வாழ்த்துக்கள்.


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா