பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
13

3 கேட்டதற்கு "அவருக்குத் தெரியாது' என்று நான் பதில் சொல்ல, அவர் இனிமேல் அவர் குழந்தைகளுக்கு எதாவது தெரியாத பாஷை யில் பட்டைக் கற்பிப்பதானுல் அப்பதங்களை எப்படி உச்சரிப்பதென் றும். அவைகளின் அர்த்தமென்னவென்றும் கற்றுக்கொண்டே, பிறகு சொல்லிக் கொடுக்கும்படிச் செய்யுங்கள் தயவு செய்து' என்று கூறி ர்ை நானும் அவர் கூறியது சரியென்று ஒப்புக்கொண்டேன். பிறகு, அவரிடம் என் மேஜையின் மீதிருந்த இரண்டொரு ஆங்கில வர்த்தமானப் பத்திரிகைகளைக் கொடுத்து படித்துக்கொண்டிருக்கும் படிச் சொல்லிவிட்டு நான் எங்கள் எதிர் வீட்டுக்கு ஏதோ வேலையாய் போய் திரும்பி வந்தேன். அச்சமயம் என் வாயிற்படிக்கெதிரில் ஒரு ஏழைப் பண்டாரம் ஒத்தைத்தந்தி சுரைக் குடுக்கையைக் கையில் வைத்துக்கொண்டு, ராமலிங்க சுவாமிகள் பாடிய ஒரு பாட்டை பாட ஆரம்பித்தான் ; நான் மெத்தைக்குப் போக, எனது நண்பர் அந் தப் பிச்சைக்கரன் பாட்டையும், ராக சுத்தத்தையும் மெச்சி அவ னுக்கு ஏதோ கொடுக்கப்போனுர் நான் அதைத்தடுத்து அவனுக் குக் கொடுக்கவேண்டியது என் கடமை என்று சொல்லி, அப்பிச் சைக்காரனுக்கு ஒரு அணு கொடுத்தேன். அவன் மிகவும் சந்தோஷப் பட்டவய்ை இன்னுெரு பாட்டைப் பாட ஆரம்பித்தான். அந்த பாட்டு என்ன வென்று நினைக்கிறீர்கள் : சல்சல் ஜவான்! அந்தப்பாட் டைப் பாட ஆரம்பித்தவுடன் எனக்கு கோபத்தால் சிரிப்புவர், எனது நண்பரும் நகைத்துவிட்டார். இதைக் கண்ட அப்பிச்சைக்காரன், தான் பாடும் பாட்டை நாங்கள் மெச்சுவதாக எண்ணி அப்பாட்டை இன்னும் உரக்கப் பாட ஆரம்பித்தான். உடனே நான் அவனைத் தடுத்து அப்பா அந்தப் ப்ாட்டை பாடாமலிருப்பதற்காக உனக்கு 2 அஞ் கொடுக்கிறேன்' என்று சொல்லி அப்படியே செய்து அவ்னே வந்த் வழி அனுப்பிவிட்டேன். சுலபத்தில் இக்கஷ்டத்தினின்று நீங்கினேமே என்று சந்தோஷப் பட்டு, என் அதிதியை ஸ்நானம் செய்யச்சொல்லி பிறகு இருவருமாக போஜனம் கொண்டபின், மறுபடியும் மேல்மாடத்துக்குப் போய் இளைப் பாறச் செய்தேன். அங்கிருந்த என் ரேடியோ செட்டைக் க்ண்ட வுட்ன், எனது புதிய நண்பர் முகமலர்ந்து 'உங்களுக்கு சங்கீதத்தில் இவ்வளவு பிரியம் இருக்கிறதென்று எனக்கு இதைப் பார்த்த பிறகு தான் தெரிந்தது என்று கூறி, அந்த ரேடியோவை முடுக்கும்படிக் கேட்டார். இதற்குள்ளாக ஒரு மணி ஆக அச்சமயம் திருச்சிராப் பள்ளியில் நல்ல சங்கீதம் கிடைக்கு மென்று எண்ணினவனுய் திருச்சி ரேடியோவுக்கு என் ரேடியோ பெட்டியை முடுக்கினேன். அன்றை தினம் கதம்பம்' என்றிருந்தது. அரைமணி சாவகாசம், கே. பி. சுந்தராம்பாள் பாட்டு. எஸ். ஜி. கிட்டப்பா பாட்டு முதலிய பாட்டு