பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
15

15 பெற்றுக் கொண்டு நாங்களிருவரும் கச்சேரி சாலையினின்றும் வெளிக் கிளம்பினுேம். இதை வாசிக்கும் நண்பர்கள் என்னே நம்பிஞலும் நம்பட்டும் இல்லாவிட்டாலும் வேண்டாம், நாங்கள் இருவரும் என்_கரில் எறி உட்கார்ந்ததும், எங்களிருவருக்கும் அடக்கக்கூடாதபடி சிரிப்பு வந் தது. பிறகு அங்கிருந்த என்து நண்பரை கடற்கரை ஓரம் அழைத் துச் சென்று, அவர் மன்தைக் கொஞ்சம் குளிரச் செய்யலாமென்று எண்ணினவனுய், எனது (Chafieur) ஷாபரை மெரினுப்பக்கம் ஒட் டச் சொன்ன்ேன். போகும் பொழுது வழியில் விக்டோரியா பப்ளிக் ஹாலைக் கடந்து செல்லவேண்டி வந்தது. அக்கட்டடத்தைப் பார்த்து எனது புதிய நண்பர் இது என்ன வென்று கேட்க, இது விக்டோரியா பப்ளிக் ஹால் என்று பதில் சொன்னேன். அச் சமயம் உள்ளே ஒரே வெளிச்சமாயிருக்க அங்கு என்ன நடக்கிறதென்று கேட்ட கேள் விக்கு, அச்சமயம் உள்ளே வாலிப சபையார் எனது நாடகம் ஒன்றை அன்று நடித்துக் கொண்டிருப்தது எனக்கு ஞாபகம் வர, அதை அவ ருக்குத் தெரிவித்தேன். உடனே அவர் அதைத் தான் பாக்கவேண்டு மென்று விருப்பமிருப்பதாகச் செல்ல அவரை அழைத்துக் கொண்டு டவுன் ஹாலின் மெத்தைக்குப் போனேன். அந்த வாலிப சங்கத் தார் எங்களை மிகவும் சந்தோஷமாய் வரவேற்று முன்னுல் உட்கார வைத்தார்கள். அப்பொழுது சுமார் 7-30-மணி இருக்கும் அரைமணி சாவகாசம் அவர் நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்து காடகக் கதை யின் போக்கை பற்றி ஏதோ புகழ்ந்து பேசினுர், பாஷை தெரியாம லிருந்த போதிலும் கதையின் நடிப்பைக்கொண்டு அவர் கிரஹித்துக் கொண்டார்போலும். பிறகு ஒரு காட்சியில் கதா நாயகன் கதா நாய கியை ஒரு மலர்ச்சோலையில் சந்தித்து இருவரும் நிலவை வியக்து பேசிக்கொண்டிருக்கும் பொழுது கதா நாயகன் தனது காதலியை “இச்சமயம், என் செவிகள் இன்பமடையும்படி உன் இனிய குரலி ளுல் ஏதாவது பாடு' என்று வேண்டுகிருன்; உடனே கதாநாயகி சில் சல்-என்று பாட ஆரம்பித்தாள். அப்பாட்டின் மூன்ருவது பதம். அந்த நடிகையின் வாயினின்றும் வருமுன் தெய்வாதீனமாய் 8-மணி அடிக்கும் ஓசை கேட்டது. உடனே இதுதான் சமயம் என்று 'ஆஹா, 8-மணியாகிவிட்டது தாங்கள் வீட்டுக்குப்போய் சாப்பிட்டுவிட்டு ரெயில் ஏறி ராமேச்வரம் போக நேரமாய்விட்டது' என்று அவசரமாய்க் கூறி அவர் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு போகாத குறையாய் வெளி யில் அழைத்துக் கொண்டு வந்துவிட்டேன். நான் திடீர் என்று எழுங் திருக்கவே, காதா நாயகியாக நடித்த நடிகனும், பக்க வாத்தியக்கரர் களும், பாட்டை திடீரென்று நிறுத்திவிட்டார்கள். எனது புதிய நண் பர், அந்தப் பாட்டு ஆரம்பிக்கப்பட்டதைக் கேட்டாரிே இல்லையோ, நான் என்ன காரணம் பற்றி அவரை திடீரென்று வெளியே அழைத்துக்