பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
16

16 கொண்டு வந்து விட்டேன் என்பதைத் தெரிந்துகொண்டாரோ என் னவோ, இன்றளவும் எனக்கு சந்தேகமாகத்தானிருக்கிறது. சீக்கிரம் வீட்டிற்குப் போய் அவருக்கு போஜனம் அளித்து, பிறகு அவரை அன்றிரவு, எழும்பூர் ரெயில் ஸ்டேஷனுக்கு அழைத்துக் கொண்டுபோய் ரெயில் ஏற்றிவிட்டு வந்தபிறகுதான் அன்றிரவு தூங்கி னேன். அன்று என் நித்திரையில் கூட அப்பாட்டைக் கேட்டேனே. என்னமோ நான் வாஸ்தவமாய்ச் சொல்லமுடியாது. இரண்டு நாள் பொறுத்து எனது புதிய நண்பர் ராமேச்வரத்தி லிருந்து எனக்கு எழுதிய கடிதத்தில் நான் பட்டணத்தில் தன்னை வர வேற்றதற்காக வந்தனம் கூறிவிட்டு, கடைசியில் கர்நாடக சங்கீதத் தைப் பற்றி சில வரிகள் எழுதியிருந்தார். அதை மாத்திரம் இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். - “ஒவ்வொரு சங்கீத வித்வானும் தான் அறிந்த பாஷையில் பாடுவதுதான் தகுதி. இதர பாஷைப் பாட்டுக்களைப் பாட வேண்டுமென்று விருப்பமிருந்தால், அப் பாஷையைக கற்று, பாடும் பாட்டுகளின் அர்த்தத்தை அறிந்த பிறகே பாடுதல் நில மென்று தோன்றுகிறது." எனது புதிய நண்பர் எனக்கு தெரிவித்த இந்த உண்மையை நான் நமது நாட்டு சங்கீத வித்வான்களுக்கும் சங்கீதப் பிரியர்களுக் கும் வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். ཨ་མས་ཕ་ཡ་མ་(G་ཡ──ཡཞསྨ எனது சிறு விரல் மோதிரம் (உண்மையான கதை) ஆங்கிலத்தில் மாஸ்கரட் (Mascal) என்று ஒரு பதம் உண்டு அதன் அர்த்தம் 'ஒருவன் தனக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் தன் உயிர் நிலையைப்போல பாதுத்ாத்து வரும் ஒரு பொருள் " என்பதாம். தமிழில் இதற்குச் சரியான் பதும், எனிக்குத் தெரிந்த வரையில் கிடையாது. ஆயினும் இதிகாசப் புராணக் கதைகள் சிலவற்றுள், சிலர் உயிர்கில இன்ன பொருள்களில் இருக்கின்றன எனவும் கருதி, ஆவைகளை அவர்கள் மிகவும் ஜாக்கிரதையாகப் ப்ாது காத்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இவைகளே, அவர்களுடைய மாஸ்காட்டுகள் என்று ஒரு விதமாகக் கூறலாம்.