பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
26

26 முத்தமிடுவதைவிட்டு, என்கையையேன் முத்தமிட்டார்கள்!-நான் மெலிந்து போன என் கையை மெல்லத்துக்கி, என் நெற்றியைத் தொடப்பார்த்தேன் அச்சமயம் தான் அங்கு ஒரு பெரிய கட்டு கட்டி யிருப்பதை அறிந்தேன் மறு நிமிஷம் என்க்கு எல்லாம் விளக்க மாயிற்று வெடிகுண்டோ என்னவோ என் தலையில் மோத, நான் காயம் பட்டு பிரக்ஞை அற்று போயிருக்கவேண்டும், ஆயினும் என்னே இங்கு யார் கொண்டு வந்தது? இந்த ஆஸ்பத்திரி எங்கே இருக்கிறது ? என்னுடைய தகப்பனுர் என்ன-- இட்சணம் ஆஸ்பத்திரி நர்ஸ் (Nurse) ஒரு அம்மாள் வந்து என் தேக உஷ்ணத்தை, உஷ்ணமறியும் கருவியைக் கொண்டு பரி சோதித்துப் பார்த்தார்கள் நான் கொஞ்சம் தைரியத்துடன், என் தாயார் எங்கே! என்று அவர்களைக் கேட்க-"அவர்கள் எல்லாம் சரி தான்-நான் அவர்கள்ை இங்கு அழைத்துக் கொண்டு வருகிறேன். ' என்று சொல்லி விட்டு வெளியே போய், என் தாயாரை அழைத்துக் கொண்டு வந்தார்கள்; என் தாயாருடன் ஒருவர் வந்தார், அவர் ஒரு வயித்தியராயிருக்க வேண்டும் என்று ஊகித்தேன். என் தாயார் என் படுக்கைக்கு ஓடிவந்து, தன் கைகளால் என்ன அனைத்து, என் நெற்றியின் பேரில் கட்டுகட்டியிருந்ததின் மீது முத்தமிட்டார்கள். நான் அச்சமயம் தகப்பனர் எங்கே என்று மெல்ல கேட்க-அவர்கள் மிருதுவாய்,"அவர் சுகமாய்தான்-இருக்கிருர்-சீக்கிரம் நாம் அவரைத் காண்போம் கவலைப்படாதே-' என்ருர்கள்-உடனே வயித்தியர் என்னைப்பார்த்து 'பிள்ளையாண்டான்! நீ இப்பொழுது என் வசம் இருக் கிருய்-நான் சொல்கிறபடி கேட்க வேண்டும் - எதைப்பற்றியும் இப்பொழுது-கவலைப்படாதே ; - நான் உன் காயத்தைப் பரிசோதித் துப்பார்த்து கட்டு கட்டுமளவும் பேசாதே ஒன்றும் '--என்று சொல்லி என் இருதயம் எல்லாம் பரிசோதித்துப் பார்த்து விட்டு என் நெற்றியிலிருந்த கட்டை அவிழ்த்துச் சிகிச்சை செய்து மறுபடியும் புதிய ஒரு கட்டைக் கட்டிவிட்டு-'அம்மா இனி உங்களுக்கு ஒரு ப்யமும் வேண்டாம்-காயம் சரியாக ஆறிக்கொண்டு வருகிறது," என்று கூறிவிட்டு நர்ஸிடம், என் ஆகாரத்திற்காக ஏதோ கொடுக்கும் படி சொல்லிவிட்டு, வெளியே ப்ோய் விட்டார்-போகு முன் என் தாயாரிடம் இவன்-எதைப்பற்றியும்-கவலைபடாதபடி கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று கூறிப்போளுர்-உடனே நர்ஸும் வெளியே போக, என் தாயாரும் நானும் மாத்திரம் தனித்திருந்தோம். நான் தனியாய் என் தாயாருடன் இருந்தபோது, கொஞ்சம் களை தீர்ந்தவளுய், 'அம்மா, அப்பா எங்கே இருக்கிருர்கள் எப்பொழுது வருவார்கள் சொல்லுங்கள்,' என்று கேட்டேன், அதற்கு அவர்கள் அவர் சுகமாய்த்தானிருக்கிருர்-நம்மிடம் கொஞ்ச காலம் பொறுத்து