பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/3

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஓர் ஆசிரியரின் கஷ்டங்கள் (கட்டுகதை) ஒருவன் தான் படும் கஷ்டங்களைத் தன் நண்பர்களுக்கு வாய் விட்டுத் தெரிவித்தால், அவைகளின் துயரம் பாதி ஆறுவான், என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, இதை உங்களுக்குத் தெரிவிக் கிறேன். ஒரு வாரத்திற்கு முன்பாக ஒரு புதிய நாடகம் ரேடியோவிற்காக எழுதிக் கொடுப்பதாக ஒரு நண்பரிடம் வாக்கு கொடுத்தேன். அது முதல், தினம் அவர் அது பூர்த்தியாகி விட்டதா ? என்று கேட்க ஆரம் பித்தார். நான்கைந்து நாட்களாக, என் மூளையை நான் எவ்வளவு தான் கலக்கியபோதிலும், புதிய விஷயம் ஒன்றும் தோன்றவில்லை." என் புத்திக்கு இன்று காலே எழுந்த பொழுது திடீரென்று ஒரு அற் புதமான விஷயம் என் புத்தியிற் பட்டது. அதை ஒரு சிலு நாடகமாக எழுதலாமென்று, ஆவலுடன், என் காலேக் கடனே விரைவில் முடித் துக் கொண்டு எழுத உட்கார்ந்தேன்.-என் வழக்கப்படி காகிதங்கள்ை ஒழுங்காய் அடுக்கிக்கொண்டு- என் பென்சிலை சீவிக்கொண்டு-பிள் ளையார் சுழி போட்டவுடன்-டக் டக் என்று ஒரு பெரிய சப்தம் என் காதில் விழுந்தது. இது என்னடா என்று நான் எழுந்து ஜன்ன்ல் வழி யாக வீதியில் பார்த்தால், என் கண் எல்லாம் புகையில்ை சூழப்பட் டது. என் வீட்டிற் கெதிராக ஒரு முனிசிபல் ஸ்டீம் ரோலர் (Steam roller) வர ஆரம்பித்தது உடனே என் அறையெல்லாம் புகை நிரம்பிவிட்டது. அந்த ஸ்டீம் ரோலர் என் வீட்டிற் கப்புறம் க்ொஞ் சம் தூரம் போகிறவரையில் என் கண்களையும் காதுகளையும் முடிக் கொண்டிருந்தேன். பிறகு அப்புகையும் நீங்கி சப்தமும் குறைந்த பிறகு, என்னடா இது, பிள்ளையார் சுழி போட்டவுடன் இந்தத் தடை வந்ததே என்று கலங்கினவனுய், ஒருவாறு மனதைத் திடப்படுத்திக் கொண்டு, மறுபடியும் பென்சிலேக் கையிலெடுத்தேன். எடுத்த்ேளுே இல்லையோ, இரண்டு குழந்தைகளின் ஆழுகுரல் என் செவியிற் பட் டது. உடனே சிவராமன் எனும் ஏன் பேரனும், சரோஜினி எனும் என் பேத்தியும் அழுதுகொண்டே மெத்தைப்படி ஏறி என் அறைக்கு வந்தனர், நான் எதையும் பொறுப்பேன், குழந்தைகளின் அழுகுரல் மாத்திரம் எக் கரணத்தாலோ என்னல் பொறுக்கமுடியாது. இக்வே எடுத்த பென்சிலே மறுபடியும் அதன் இருப்பிடம் வைத்து விட்டு, அவர்கள் அழுவதற்குக் காரணத்தை விசாரித்தேன்.-பின்வரு மாறு; ‘ என்னும்மா- சண்டே அது, சரோஜா !” " தம்பி என்னெ அடிச்சான் !”