பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

28

28 போதெல்லாம் அவர்களுக்கு மன வருத்தம் அதிகமாகியது, என்று கண்டு அவரைப்பற்றி கேட்பதை விட்டேன்,


ஒரு நாள் துரைத்தனத்தளிடமிருந்து என்ன ராணுவத்திலிருந்து விடுவித்ததாக உத்திரவு வந்தது எனக்கு நேரிட்ட விபத்தில் எனது இடது கரம் பிரயோஜன மற்றதாய் விட்டது என்பதை, உங்களுக்கு சொல்ல மறந்தேன், எனக்கு போனஸ் (Bonus) பணம் கொடுத்து ஏதாவது சிவில் உத்தியோகத்தில் என்னைப் பிறகு எடுத்துக் கொள் வதாகவும் தெரிவித்தார்கள் இதை நான் சந்தோஷத்துடன் வர வேற்றேன், இதை நான் என் தாயாருக்குத் தெரிவித்தேன் அவர் களும் சந்தோஷப்பட்டார்கள் ஏனெனில், உண்மையைக் கூறு மிடத்து என் பிதுர் ராஜித சொத்து பெரும்பாலும், எனக்கு சிகிச்சைச் செய்வதில் செலவழிந்து போய் விட்டது. அச்சமயம் நான், ‘என்துர் அதிஷ்டம் தகப்பனார் நம்முடன் இல்லையே இந்த சந்தோஷ சமாசாரத்தைக் கேட்க" என்று வருத்தப் பட்டேன். அப்பொழுது தான், என் தகப்பனாரைப் பற்றி உண்மையை எனக்கு வெளியிட் டார்கள்-ராணுவ உத்தியோகஸ்தர்கள் அவரது உடலைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்றும், ஆகவே அவரை காணாமற் போன படை வீரர்களின் எண்ணிக்கையில் சேர்க்கப் படவேண்டும் என்று, தெரிவித்ததாகச் சொன்னார்கள். ஆயினும் அவர் உயிரோடுதான் இருக்கிறார் எப்படியும் கடவுளின் கிருபையால் ஒரு நாள் நம்மிடம் வந்து சேர்வார் ! என்றும் உறுதியாய் கூறினார்கள். இதைக் கேட்ட தும் என்ன காரணத்தினாலோ முதலில் இருந்த என் மன துயரம் சற்று நீங்கி ஆறுதலடைந்தேன்.


கொஞ்சம் காலம் பொறுத்து, கடல் சுங்கம் வாங்கும் ஆபிசில் (Custom house office) இதைக் கேட்டபோது என் தாயார் முக்கியமாக சந்தோஷப் பட்டார்கள், அப்பொழுது அவர்கள் என்றைக்காவது ஒரு நாள் உன் தகப்பனார் ரங்கூனிலிருந்து வந்து சேர்வார்கள். ஆகவே அங்கிருந்து வரும் நீராவிக் கப்பல்களிலிருந்து வருபவர்களை யெல்லாம், தினம் கவனித்துப் பார்த்துக்கொண்டு வரவேண்டும், என்று என்னிடமிருந்து வாக்குறுதி வாங்கிக் கொண்டார்கள் அப்படி என் தகப்பனார் வருவார் என்று எனக்கு கொஞ்ச மேலும் நம்பிக்கையில்லா விட்டாலும், அவர்களை திருப்தி செய்வதற்காக அப்படியே செய்வதாகவும் ஒப்புக் கொண்டேன். வருடம் மாறி வருடம் வந்தது, என் தகப்பனார் ரங்கூன் ஸ்டீமரில் திரும்பி வரவில்லை; அவரைப் பற்றி நான் நினைக்கும் போதெல்லாம் அவரை நான் மறுபடியும் காண்பேன் என்னும் ஆசை குன்றிக்