பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
31

31 சையனித்தைப் பற்றிதான் ஒன்றும் கூற மறுத்ததாயும், பிறகு சண்டை முடிந்து சமாதானம் ஆன பிறகு தான், அவர்கள் தன்னை சிறை யிலிருந்து விடுவித்தாயும் சொன்னர், விடுபட்டவுடன் ரங்கூனுக்கு வந்து ஒரு தமிழ் பத்திரிகையில் நான் ஒரு பத்திரியில் அவரைப்பற்றி விளுவியிருந்த சமாசாரத்தை வாசித்து, உடனே நீராவிக் கப்பலேறி, பட்டணம் வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்தார் அன்றிரவு மிகவும் சந்தோஷமாய்த் தூங்கினேன் என்று நான் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை, அன்றுமுதல் தெய்வம் ஒன்று இருக்கிறது என்றும், எந்த முடியாத காரியமும் தெய்வாதீனத்தால் முடியக்கூடும் என்று நம்பிக்கையுடையவனுயினேன். இனி நான் அந்த நம்பிக்கை உடைய வணுயிருப்பதைப் பற்றி இதை வாசிக்கும் எனது நண்பர்கள் சிரிக்க விரும்பியிருந்தால் சிரிக்கட்டும். —O— தாரக மந்திரம் (என் தாயார் எனக்கு சொன்ன கட்டு கதை) ஒரே ஒரு காட்டிலே ஒரு ரிஷி இருந்தார், அவருக்கு அநேக வருஷமாக ஒரு சிஷ்யர் பணிவிடை செய்து வந்தார், குரு சிஷ்யருக்கு எல்லா வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார். ஆலுைம் தாரக மந்திரம் அதாவது மோட்சத்தை கொடுக்கும் மந்திரம் மாத்திரம் சொல்லவில்லை, அந்த மந்திரத்தை சிஷ்யராக கேட்டு தெரிந்து கொள்ள கூடாது. குருவாக பார்த்து சந்தோஷப்பட்டு உபதேசம் செய்தால்தான் அது ப்லிக்கும், சிஷ்யர் பாவம் எப்போது குரு உபதேசம் செய்வாரோ என்று காத்திருந்தார், வெகு காலம் சென்று ஒரு நாள் குருவானவர், சிஷ்யரை அழைத்து 'அப்பா, நான் மோட்சம் அடையும் காலம் நெருங்கி விட்டது. இன்றைக்கு உனக்கு நான் தாரக மந்திரம் உபதேசிக்கப் போகிறேன். சீக்கிரம் போய் அதோ இருக்கும் குளத்தில் குளித்துவிட்டு பரிசுத்தகை வா" என்று சொன்னர் உடனே சிஷ்யர் விரைந்து போனர். அவர் திரும்பி வருமுன் குரு தன் பிராணன் போய்விடும் என்று அறிந்தவராய் தன் அருகில் இருந்த மணலை பரப்பி அதன் பேரில் அம் மந்திரத்தை எழுதிவிட்டு உயிர் நீத்தார், அச்சமயத்தில் அருகாமையில் போய்க் கொண்டிருந்த ஒரு தொம்பரவச்சி இதை பார்த்தவளாய்; தன் காதில் அணிந்திருந்த ஓலையைச் சீக்கிரம் எடுத்து மணலில் எழுதி இருந்த எழுத்துக்களை தன் நகத்தால் அப்படியே எழுதிக்கொண்டு ஒலையை காதில் அணிந்து கொண்டு மணலில் எழுதி இருந்ததை கையால் அழித்து விட்டாள்.