பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

32

32. தூரத்தில் குளித்துக் கொண்டிருந்த சிஷ்யர் இதை யெல்லாம் ஒருவாறு பார்த்திருந்து ஓடோடியும் வந்தார், இதற்குள்ளாக குரு எழுதியதை அழித்து விட்டதைக் கண்டார், மிகவும் துக்கப்பட்டார்; என்ன செய்வார் பாவம் ! பிறகு குருவின் உடலை தகனம் செய்து விட்டு அந்த தொம்பரவச்சி இருக்கும் இடத்தைத் தேடி சென்று அக்கூட்ட தலைவனிடம் தன்னையும் ஒரு வேலையாளாக சேர்த்துக் கொள்ளும்படி வேண்டினார், அக் கூட்டத்தில் இருந்துகொண்டு தொம்பரவச்சி சொன்ன வேலைகளை யெல்லாம் மிகவும் பணிவுடன் செய்து வந்தார்-அவளை திருப்தி செய்வதற்காக, இப்படி பல நாட்கள் கழிந்தன, தொம்பரவச்சியாக சந்தோஷப்பட்டு அவள் காதில் அணிந்த ஓலையில் எழுதி இருந்த மந்திரத்தை அவளாக சொல்வாள் என்று எதிர்பார்த்திருந்தார். அவள் சொல்லவே இல்லை, ஏதாவது நல்ல சமயம் வருமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் சிஷ்யர். பிறகு ஒரு நாள் திடீரென்று பக்கத்தில் இருந்த ஒரு அரசருடைய முக்கிய பட்டணத்தை தொம்பரவ கூட்டம் போய் சேர்ந்தது, பிறகு தொம்பரத் தலைவன் அரசரிடம் போய், தன் வித்தைகளை யெல்லாம் காட்ட விரும்பினான் , அரசரும் அதற்கு இசைந்து மறுநாள் அந்த வித்தைகளை பார்ப்பதாக ஒப்புக் கொண்டர் பிறகு மந்திரியை அழைத்து அக் கூட்டத்தார்க்கெல்லாம் அரண் மனையில் சாப்பாடு போடும்படி சொன்னார். அந்த அரசருடைய அரண்மனையில் ஒரு ஆராய்ச்சி மணிகட்டி இருந்தது, அந்த மணியின் பெருமை என்ன வென்றால் அரண் மனைக்குள் மகான்கள் யாராவது சாப்பிட்டால் தானாக இவை கண கணவென்று அடிக்கும் அன்றைத் தினம் தொம்பர கூட்டம் சாப்பிடும்போது வழக்கம்போல் நாலைந்து தரம் அடிக்கும் மணி கால் நாழிகை விடாது கணகண வென்று அடித்தது, இதை கேட்டு ஆச்சர் யப்பட்டு அரசர் மந்திரியை அழைத்து "யாரோ ஒரு பெரிய மகான் வந்திருக்கிறார் போலிருக்கிறது, அது யாரென்று சீக்கிரம் தெரிந்துவா" என்று அனுப்பினார், மந்திரி அப்படியே அந்த பெரிய அரண் மனைக்குள் யார் யார் புதிதாக வந்தார்கள் என்று விசாரித்துக்கொண்டு வந்தான். அவர்களுள் ஒருவரும் மகானாக காணப்படவில்லை, கடைசியில் தொம்பரக் கூட்டம் இருக்கும் இடத்திற்கு போய் சேர்ந் தான், அவர்களை ஒவ்வொருவராய் பார்த்துக் கொண்டு வரும்போது நம்முடைய சிஷ்யரைக் கண்டவுடன் இவர் தொம்பரவனாக காணப் படவில்லை என்று சந்தேகப்பட்டு அவரிடம் போய் அவரை ஒரு புறமாக அழைத்துச் சென்று இரகசியமாய் 'ஐயா, உங்கள் முகத்தைப் பார்த்தால் நீங்கள் இந்த தொம்பர கூட்டத்தை சேர்ந்தவர் அன்று