பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
33

33 என்று தெரிகிறது-உங்கள் முகத்தின் தேஜஸினல் நீங்கள் ஒரு மகானுக காணப்படுகிறீர்-நீங்கள் இக் கூட்டத்தில் ஏன் வந்து சேர்ந்தீர் என்று எனக்கு தயவுசெய்து சொல்லவேண்டும்” என்று கேட்டான். அதன்பேரில் அந்த சிஷ்யர் தன் சமாசாரத்தை யெல்லாம் சவிஸ்தாரமாக கூறி நாளை தினம் எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும் என்று காதில் எதோ இரகசிமாய் சொன்னர்; மந்திரியும் அப்படியே ஆகட்டும் என்று சொல்லி விட்டு அரசரிடம் போய் எல்லாவற்றையும் தெரிவித்தான். மறுநாள் அரசர் காலே சிற்றுண்டி அருந்தி விட்டு தன் பரிவாரங் களுடன் உட்கார்ந்து கொண்டு தொம்பரவர்களை அழைத்து அவர்கள் விததையை எல்லாம் காட்டச் சொன்னுர், அவர்களும் ஒவ்வொன்ருய் தங்கள் வித்தைகளே காட்டிக் கொண்டு வந்தார்கள், கடைசியில் தொம்பரவச்சி கெடைகட்டி அதன் மேலிருந்து ஆட ஆரம்பித்தாள். அவள் ஆடும்பொழுது கர்ல், கை, கழுத்து காது. மூக்கு முதலிய அவயவங்களில் பல வர்ணமான மணிகளால் ஆகிய ஆபரணங்களையும் காதில் ஓலையும் அணிந்திருந்தாள் கம்பத்தின் கீழ் இருந்த நமது சிஷ்யர் வெள்ளி, பென்னல் ஆகிய ஆபரணங்களை அருகில் இருந்த மந்திரி கொடுக்க ஒவ்வொன்ருக மேலே எறிந்து கொண்டு வந்தார், தொம் பரவச்சி ஆடிக் கொண்டே ஒவ்வொன்ருய் பிடித்து, தான். அணிந்திருந்த அற்ப ஆபரணங்களை கழட்டிவிட்டு சிஷ்யர் எறிந்த: விலையுயர்ந்த ஆபரணங்களை போட்டுக்கொண்டே கெடையில்: மிகுந்த சாதுர்யமாக ஆடிக் கொண்டிருந்தாள்; கடைசியாக சிஷ்யர், ரத்தினங்கள் பதித்த கம்மலை எறிய அதை பார்த்தவுடன் மிகுந்தக சந்தோஷப்பட்டு தன் காதில் இருந்த ஒலை சுருள்களை கீழே எறிந்து விட்டு ரத்தின கம்மல்களை போட்டுக கொண்டாள்; கீழே இருந்த சிஷ்யர் அக் காதோலைகள் தரையில் விழாமல் கைகளால் பிடித்துக் கொண்டு உடனே அதில் ஒன்றை பிரித்து பார்த்து அவ்வோலையை கண்களில் ஒற்றிக் கொண்டு தொம்பரவச்சிக்கும் மந்திரிக்கும் அரசருக்கும் வணக்கம் செலுத்திவிட்டு சரேலென்று சந்நியாசிகள் செய்ய வேண்டிய பூபிரதட்சணத்திற்காக புறப்பட்டுவிட்டார். மந்திரியானவன் தான் அறிந்த வித்தாந்தத்தை யெல்லாம் அரசருக்கு தெரிவித்தான், அரசர் ஆச்சர்யப் பட்டு சந்தோஷப்பட்ட்ார் —o—