பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

34

குரு சிஷ்ய சம்வாதம் (மானசீகம்)


1. சிஷ்யன் குருவை பார்த்து ஒரு முறை ' சுவாமி சிலர் தெய் வமே இல்லையென்கிறார்களே, அவர்களுக்கு நாம் எப்படி புத்தி புகட்டு வது ' என்று கேட்டான் அதற்கு குருவானவர் " அப்பா என் சிறு வயதில் இதைப் பற்றி நடந்த ஒரு சமாசாரத்தைச் சொல்கிறேன் கேள் ஒருமுறை ஒருவன் என்னிடம் வந்து" நான் உங்களுடன் ஒரு வாக்கு வாதம் செய்ய விரும்புகிறேன்: நான் தெய்வம் என்று ஒன்று இல்லை யென்று சொல்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ! என்று கேட்டான். அதற்கு நான் ஐயா தெய்வம் என்று ஒன்று இல்லை என்கிறீர்களே, என்ன இல்லையென்கிறீர்கள்? இன்று இல்லை என்று சொல்லுமுன் இல்லாதது என்ன, எப்படிப்பட்டது என்று தெரிய வேண்டாமா ? ஆகவே, உங்கள் அபிப்பிராயத்தில் தெய்வம் என் பதற்கு என்ன அர்த்தம் ? இதை முதலில் தெரிந்துக் கொண்டால் பிறகு நாம் இதைப்பற்றி வாக்கு வாதம் செய்யலாம் என்று பதில் உரைத்தேன். உடனே அவன் கோபம்கொண்டு போய்விட்டான். நீயும் யாராவது உன்னைக் கேட்டால் இம்மாதிரி பதில் சொல் ” என்று பதில் கூறினார்.


2. சிஷ்யன் ஒரு நாள் குருவை பார்த்து 'சுவாமி நான் ஒரு வருக்கும் கெடுதி செய்வதில்லை, உங்கள் ; கட்டளைப்படி மற்றவர்கள் ஏன் எனக்கு,கெடுதி செய்ய வேண்டும்?' என்று கேட்டான். அதற்கு குருவானவர் "இந்த கேள்விக்கு பதில் சொல்லுவதை விட நான் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன்-நீ யாருக்கு என்ன நன்மை செய்தாய்? அவர்கள் உனக்கு நன்மை செய்ய ?-இதை யோசித்து பார்" என்று பதில் சொல்லி அனுப்பினார்.


3. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்து சிஷ்யன் குருவண்டை போய் சுவாமி கர்மா, கர்மா என்று சொல்கிறீர்களே, இந்த கர்மா முதலில் என்னமாக உண்டாயிற்று" என்று கேட்டான். அதற்கு அவர் 'உன் கேள்விக்கு பதிலாக, நான் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன்: அதற்கு பதில் உனக்கு தெரியுமாயின் உன் கேள்விக்கு பதிலும் தெரி யும் உனக்கு அக்கேள்வி என்ன வென்றால்-மரம் இல்லாமல் விதை யுண்டாகாது, விதையில்லாமல் மரம் உண்டாகாது, இரண்டில் எது முதலில் உண்டாயிற்று, யோசித்துப் பார் என்றார்.


4. கொஞ்சநாள் பொறுத்து சிஷ்யன் குருவை அணுகி" சுவாமி நீங்கள் சொன்னபடியே அநேகருக்கு என்னால் இயன்ற அளவு உப