பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
35

35 காரம் செய்து வருகிறேன், அப்படி இருந்தும் சிலர் எனக்கு அபகாரம் செய்கிறர்கள் இது என் என்றுகேட்க குருவானவர் 'அப்பர் இந்த கேள் விக்குப்பதில் நம்முடைய ஹிந்து மதத்தில் தான் உளது. அப்படி உனக்கு ஏதாவது கெடுதி நேரிட்டால், அது பூர்வ ஜன்ம கர்மபலன் என்று எண்ணி, முன் ஜென்மத்தில் நாம் செய்த பாப்ம் இப்பொழுது இப்படி நேர்ந்தது - ஆகவே இத்துடன் அந்த பாபம் ஒழிந்தது, என்று நினைத்து சந்தோஷப் படு' என்ருர், - 5. ஒரு நாள் குருவிற்கும் சிஷ்யனுக்கும் மனிதன் ஜீவ்ய காலத் தைப்பற்றி சம்பாஷணைவந்தபோது சிஷ்யன் குருவை நோக்கி ஸ்வாமி நீங்கள் இவ்வுலகில் எத்தனை காலம் உயிருடன் இருக்க விரும்புகிறீர்! என்று கேட்ட போது, அவர் அப்பா ! இவ்வுல்கத்திற்கு நான் ஏதாவது தொண்டு செய்யும் சக்தி எனக்குள்ளளவும், உயிருடன் இருக்க விரும்புகிறேன். அச்சக்தி யெல்லாம் நீங்கின உடன் ஈஸ் வரன் என்னை அழைத்துக் கொள்வார் என்று பதில் உரைத்தார். 6. ஒரு வெள்ளிக்கிழமை குருவானவர்சிஷ்யனஒரு கோயிலுக்கு அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் முடித்துக் கொண்டு திரும்பினர். திரும்பி வீட்டிற்கு வரும் போது சிஷ்யன் குருவைப் பார்த்து ஸ்வாமி கோயிலுக்குள் இருந்த பொழுது உங்களுக்குத் தெரிந்தவர்கள் பலர் உங்கள்ைக்கண்டு வணங்கினர்களே அவர்களிடம் ஒரு வார்த்தையும் நீங்கள் பேசவில்லையே, அதற்குக் காரணம் என்ன ? என்று கேட் டான். அதற்கு குருவானவர் அப்பா கோயிலுக்கு போனது சுவாமி தரிசினம் செய்யவா, அல்லது நமக்குத் தெரிந்தவர்களுடன் பேசவா, என்று பதில் உரைத்தார். 7. சுவாமி ஒருவன் இவ்வுலகில் நல்லவன் என்று பெயர் எடுப் பது மேலா ? அல்லது கெட்டிக்காரன் என்று பெயர் எடுப்பது மேலா? என்று கேட்க, குருவானவர் தம்பி, இவ்வுலகில் ஒருவன் நல்லவன் என்று பெயர் எடுப்பதில் கெட்டிக்காரன் என்று பெயர் எடுப்பதே மேல் என்று விடை கொடுத்தார். 8. சிஷ்யன் குருவுடன் ஒரு கலியாணத்துக்கு போய் திரும்பும் போது ஸ்வாமி அநேக பேர் கலியாணம் முதலிய சடங்குகளில் ஆசீர் வாதம் செய்கிறர்களே, இதல்ை ஏதாவது உண்மையில் பிரயோஜன்ம் உண்டா ?” என்று கேட்டான் அதற்கு குருவானவர் 'அப்பா ஆயிரம் பேர் ஒருவன ஆசீர்வதித்தால். அவர்களுள் யாராவது ஒரு வின் உத்தம புருஷனுய் இருந்தால், அவன் வாக்கு பலிக்குமல்லவா, அதற்காகத்தான் பில் ப்ெரிய்வர்களின் ஆசீர்வாதத்தை மனிதன் விரும்புவது " என்று விடை பகர்ந்தார்,