பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

39

39 அறிந்த பிறகு என்னை இல்லறத்தை மேற் கொள்ளச் சொல்லுகிறீர் களே! ' என்று கேட்டான் அதற்கு குருவானவர் 'அப்பா! அப்படி அல்ல நமது முன்னோர்கள் மிகுந்த புத்தி கூர்மையில் ஒருவன் இன்னின்ன வயதில் இன்னின்ன ஆஸ்ரமத்தை கைப்பற்றி ஒழுகவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் சிறு வயதில் ஒருவன் பிரம்மச்சாரி ஆஸ்ரமத்தில் கற்க வேண்டியவைகளை யெல்லாம் கற்றபின் தக்கப் பருவத்தில் கிரகஸ்த ஆஸ்ரமத்தை கைப்பற்ற வேண்டும் என்றும் அதன் பிறகு நடுவயதானவுடன் முதிர்வயதாரம்பத்தில் வானப்பிரஸ்த ஆஸ்ரமத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் கடைசியில் என்னைப் போல் வயது முதிர்ந்தவுடன் சன்யாசத்தை அடைய வேண்டும் என்றும் விதித்திருக் கிறார்கள்' என்று கூறி முடித்தார்.


16. சிஷ்யன் ஒரு நாள் குருவைப் பார்த்து 'சுவாமி உலகத்திற் கெல்லாம் நம்மாலியன்ற அளவு உபகாரம் செய்ய வேண்டும் என்று அடிக்கடி சொல்கிறீர்களே-ஏழைகளாகிய நம்மால் உலகத்திற்கு என்ன உபகாரம் செய்ய முடியும் என்று கேட்டான். குருவானவர் அச்சமயம் அக்கேள்விக்கு ஒன்றும் பதில் சொல்லவில்லை. மறுநாள் குருவான வர் சிஷ்யனை அழைத்துக் கொண்டு பக்கத்திலிருக்கும் ஊருக்குப் பிரயாணம் போகும் படி நேரிட்டது அப்படி இருவருமாகப் போய்க் கொண்டிருக்கும் போது, வழியில் ஒருத்தி மாம்பழம் விற்கும் கூடையி லிருந்து ஒரு பழம் கீழே நழுவி விழுந்து விட்டது. தலை மீது கூடையை வைத்துக் கொண்டிருந்த அக்கிழவி குனிந்து அப்பழத்தை எடுக்க முடியாததால் இங்கும் அங்கும் திரும்பிப் பார்த்துக் கொண் டிருந்தாள். உடனே இதைக் கண்ட குருவானவர் அப்பழத்தை எடுத்து அவள் கூடையில் வைத்தார். வேகமாய்ப் போய்க் கொண் டிருந்த இவர்கள் கொஞ்ச தூரம் சென்றபின் சிஷ்யன் குருவைப் பார்த்து, " சுவாமி, நான் அதை செய்திருக்க வேண்டும், அப்பொழுது அது எனக்கு மனதில் தோன்றாமற் போச்சுது-ஆயினும் அக்கிழவி இதற்காக உமக்கு ஒரு நல்வார்த்தையாவது கூறியிருக்கலாகாதா ?" என்று கேட்டான். குருவானவர் அதற்கு "அப்பா! அவள் சொல்லா மற் போனால் போகிறது அவள் முகத்தை அச்சமயம் உற்று பார்த் தாயா", என்று கேட்க, 'பார்த்தேன் சுவாமி, சந்தோஷமாகத்தான் போனாள் என்றான். இன்னும் கொஞ்சதூரம் போனபின், பாதையில் ஒரு புறம் சிறு பையன் அழுது கொண்டிருந்தான் அதைக் கண்ட தும் குருவானவர்" அப்பா !அப்பையன் ஏன் அழுகிறான் விசாரித்து வா', என்று அனுப்பினார் சிஷ்யன் போய் விசாரித்து விட்டுத் திரும்பி வந்து "வேறொன்றுமில்லை சுவாமி, அப்பையன் கையில் வைத்திருந்த ஒரு பைசா எங்கோயோ விழுந்து விட்டது என்று அழுது கொண்டி ருந்தான். நான் சுற்றி பார்த்து அங்கு ஒரு பொந்தில் விழுந்திருந்த அப்பைசாவை அவனிடம் கொடுத்துவிட்டு வந்தேன்", என்றான். குரு