பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
3

ہمدم امیده என்ன யோசித்துக்கொண்டிருந்தேன் இவர்கள் வருமுன் ஆர அந்தக் கதை எழுத அரம்பித்தேன்!” என்று சொல்லி என் பென்சிலை மறுபடியும் எடுத்தவுடன்-என் வேலைக்காரன் சபாபதி வந்தான். - அவனைப்பற்றி என் நண்பர்களுக்கு முன்பே தெரிந்திருக்கும். 'அம்மா, கேட்டுக்கினு வரச் சொன்னங்க!” என்ருன், “என்னடா கேட்டுக்கொண்டு வரச் சொன்னர்கள்?" 'இன்னக்கி, என்ன பதார்த்தம் போடரது இண்னு' 'அத்தெ முன்னெயே சொல்லி அழுவதற்கென்ன?” " நீ தாம்பா என் முன்னே அத்தெ செய்யவேணும் இண்ணு சொன்னேயே ' "சரிதான்! சரிதான்! நீ அதை செய்யவேண்டாம்-அவர் களுக்கு இஷ்டமான பதார்த்தம் போடச் சொல் இன்றைக்கி!-அடடே! என்க்கு ஏதாவது கீரைமாத்திரம் இருக்க வேண்டுமென்று சொல் போ !” என்று சொல்லி அவனை அனுப்பினேன். பிறகு நான் எழுத நினைத்த கதையை எப்படி ஆரம்பிப்பது என்று யோசிப்பதற்குள்-மறுபடி சபாபதி வந்தான். 'என்னடா மறுபடியும் !" 'என்ன வாங்கி வர்ரது இண்ணு கேக்கச் சொன்னங்க அம்மா 'என்னடா, தொந்திரவா போச்சு எதாவது எழவெடுத்த கீ!ை வாங்கி வா போ!' 'இப்பவே சொல்லிட்டேம்பா ! அப்புறம் என் பேர்லே கோவிச் சிக்காதே. அப்பா ! கடையிலே நீ சொல்ர கீரே விக்காதப்பா ! " இதைக் கேட்டவுடன் எனக்கு வந்த கோபத்தையும் சிரிப்பையும் அடக் கிக்கொண்டு, “சபாபதி, நீ நிரம்ப புத்திசாலி இன்றைக்கு உனக்கு இஷ்டமானதை வாங்கிக்கொண்டுவா’ என்று சொல்லி அனுப்பி னேன். (பிறகு நான் விசாரித்ததில். அவன் பாகற்காயை வாங்கிக்கொண்டு வந்ததாகத் தெரிந்தது. ஏன் இப்படிச் செய்தாய் என்று அவனைக் கேட்க " எனக் கிஷ்டமானதை வாங்கிக் கொண்டுவர்ச் சொன்னயேப்பா, எனக்கு கீரையே இஷ்டமில்லை, பாவக்காய்தான் இஷ்டம். ஆத்தொட்டு அதை வாங்கிக்கொண்டு வந் தேன்” என்றன். இந்த கஷ்டத்திற்கு என்ன செய்வது எனக்கு பாகற்காய் என்றல் மிகவும் வெறுப்பு.) அம்மட்டும் இந்த சங்கடம் ஒழிந்ததே என்று சந்தோஷப்பட்டுக் கொண்டு மறுபடியும் பென்சில எடுத்து முதல் அங்கம்' என்று எழுது வதற்காக 'முதல்' என்று எழுதினேன்-அங்கம் என்று எழுதுவதற்கு