பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
4

4. முன், என் பழைய சிநேகிதராகிய சோமசுந்தர ஐயர் மெத்தைப்படி ஏறி வந்தார் ! அவர் என்னுடன் அநேக வருடங்களுக்கு முன் பள்ளிக் கூடத் தில் கீழ்வகுப்புக்ளில் ஒன்ருய்ப் படித்தவர். அவருடன் வார்த்தை யாடாது எப்படி அனுப்பிவிடுகிறதென்று, கவலையுடன் வா-அப்பா --சோமசுந்தரம், என்ன சமாசாரம்?' என்று கேட்டேன். அவர் சாவகாசமாய் உட்கார்ந்து கொண்டு ஒன்றும் விசேஷமில்லை;சும்மா பார்த்து விட்டுப் போகலாமென்று வந்தேன் " என்ருர், பிறகு அவர் என்னுடைய யோக rேமத்தை யெல்லாம் விசாரித்தார்அதன் பேரில்நான் அவருடைய யோகrேமத்தை விசளிக்க வேண்டியதாயிற்று. பிறகு நான் ' சோமசுந்தரம், நான் கொஞ்சம் அவசரமான வேலையிலிருக்கிறேன். இன்னுெரு சமயம் வந்தால் சாவகாசமாய்ப் பேசலாம்' என்றேன். அதன் பேரில் : அப்படியே ஆகட்டும்-இப்பொழுது அவசர்மாக வந்த சமாசாரம் என்ன இவன்ருல் ' என்று ஆரம்பித்தார். அதன் மீது நான், ' ஏதாவது சொல்ல் வேண்டு ம்ென்ருல் - சீக்கிரம் சொல்லி முடிய்ப்பரி என்றேன். " வேருென்றுமில்லை-நான் வந்த விஷயம்-என் மருமகன் ஒருவன் இருக்கின்ருன். ” - உனக்கு குழைந்தைகளே இல்லை யென்ருயே, மருமகன் எப்படி வந்தான் ?” என்றேன். ' என் சொந்த மருமகன் அல்ல-என்-அண்ணன்-அதாவது -பெரியப்பா பிள்ளையின் மருமகன்-" என்ன அவனைப்பற்றி : ' " வேருென்றுமில்லை-அவன் இரண்டு வருஷங்களாக S. S. L. C. பரிட்சைக்குப் போய் பெயில் (fail) ஆயிருக்கிருன்-” " அதற்கு-நான் என்ன செய்வது ?” அதற்காக ஒன்றும் செய்யச் சொல்லவில்லை. மதராஸ் பாங்கில் ஒரு குமாஸ்தா வேலை காலியாயிருக்கிறதாம். அதன் மானே ஜர் மார்னிங்டன் துரைக்கு-கீ ஒரு சிபார்க காகிதம் கொடுக்க வேணும்-அதற்காகத்தான் அவசரமாக வந்தேன். ' அந்த மார்னிங்டன் துரையை நான் பார்த்ததே யில்லையே ? அவரை எனக்குத் தெரியாதே ; உன்னுடைய பெரியப்பா பிள்ளையின் மருமகனயும் தெரியாது-நான் எப்படி சிபாரிசு கடிதம் கொடுப்பது?"