பக்கம்:பல்சுவை விருந்து.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

了8 பல்சுவை விருந்து

பொல்லா ஒட்டைக் கலத்துக்கூழ்

புறத்தே ஒழுக மறித்துப்பார்த்(து) எல்லாங் கவிழ்ந்து திகைத்திருக்கும்

இழுதைப் பேய்க்கு வாரே."

இழுதை அறிவற்ற) என்பது கவிஞரின் சொல்லோவியம். ஒரு பேய்க்கு உண்கலம் கிடைக்கவில்லை. அது போர்க்களத்தில் இறந்து கிடந்த யானைத் துதிக்கையின் ஒரு நுனியைப் பல்லின் மேல் நிறுத்திக் கொண்டு மறுபக்கத்தில் கூழை வார்க்கும்படி வேண்டுகின்றது.

துதிக்கைத் துணியைப் பல்லின்மேல்

செவ்வே நிறுத்தித் துதிக்கையின் நுதிக்கே கூழை வாரென்னும்

நோக்கப் பேய்க்கு வாரீரே." (துணி - துண்டம்) என்பது கவிஞரின் வாக்கு. இந்த இரண்டு தாழிசைகளையும் படிக்கும்போது நம்மிடம் அளவே நகை தோன்றுகின்றதல்லவா? பெருகச் சிரித்தல்: போர்க்களத்தில் வீரர்கள் வெற்றிக் களிப்பினால் சிரிப்பது படக்காட்சிகளில் சதிகாரன் தன் சதி வெற்றியாகும்போது சிரிப்பதும் இதுவே. வாலி நகைப்பினை நானுட் கொண்டதை மேலே கண்டோம். அவன் துன்பத்தை அநுபவித்துக் கொண்டு நிலையழிந்து சோர்கின்ற நிலையை

வெள்கிட மகுடம் சாய்க்கும்

வெடிபடச் சிரிக்கும்.' என்று காட்டுவான் கம்பன். இராமனது போலி வீரத்தை எண்ணி பெரு முழக்கமிட்டுச் சிரிக்கின்றான். பின்னர், "வீரமன்று

13. தாழிசை, 572 14. Q4 - 573 15. வாலிவதை - 73