பக்கம்:பல்சுவை விருந்து.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் நகைச்சுவை 79

விதியன்று மெய்ம்மையின், வாரமன்று' என்று சாடும் போதும் இச்சிரிப்பு அவன் முகத்தில் தாண்டவமாடி இருக்க வேண்டும்.

நசைதிறந் திலங்கப் பொங்கி

நன்றுநன் றென்ன நக்கு விசைதிறந் துருமு வீழ்ந்த

தென்னவே துணின் வென்றி இசைதிறந் துயர்ந்த கையால்

எற்றினன், எற்ற லோடும் திசைதிறந் தண்டங் கீறிச்

சிரித்தது செங்கட் சீயம்.' இரணியன் தூணை அறைய அதனின்று நரசிங்கப் பெருமான் தோன்றுவதைக் காட்டும் பாடல் இது. இரணியன் தன் ப்ரிகாசச் சிரிப்பு வெளிப்பட்டு விளங்கும்படி நன்று நன்று என்று நக்குதலும் திசை திறந்து அண்டங் கீறிச் செங்கட் சீயம் சிரித்ததும் பெருகச் சிரித்தலுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

அங்கதன் இராவணனைக் குறுகி நிற்கின்றான். “இன்று இங்கு வந்த நீ யார்? வந்த வேலை என்ன? பணியாளர் உன்னைக் கொன்று தின்னாமுன் தெளிய உணர்த்துக' என்று இராவணன் கூறியதும்,

வன்றிறல் வாலி சேயும்

வாளெயிறு இலங்க நக்கான்." என்று வெடிபடச் சிரிக்கின்றான் வாலி சேய் தன்னை இராம தூதன்' என்று சொல்லிக் கொண்டு அந்த வேதநாயகன் பணித்த மாற்றம் சொல்லுவதற்கு வந்ததாகக் கூறுகின்றான்.

'உன்னை ஏவும் நரன்கொலாம் உலக நாதன்

என்றுகொண் டரக்கன் நக்கான்."

16. டிெ - 84 17. இரணியன் வதை - 127 18. அங்கதன் துது - 20 19, ു - 22