பக்கம்:பல்சுவை விருந்து.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் நகைச்சுவை 81

என்ற நூற்பாவில் இந்த நான்கு கூறுகளையும் உணர்த்துவர். இவற்றுள் எள்ளல் என்பது, தான் பிறரை எள்ளி நகுதலும் பிறரால் எள்ளப்பட்ட வழித் தான் நிகழ்தலும் என இரண்டாகும். இளமை என்பது, தான் இளமையில் பிறரை நகுதலும், பிறரிளமை கண்டு தான் நகுதலும் என இரண்டு. பேதைமை என்பது, அறிவின்மை. இது தன் பேதைமையால் நகுதலும் பிறன் பேதைமையால் நகுதலும் என இரண்டு வகையாகும். மடமை என்பது, பெரும்பான்மையும் கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை. இதுவும் தன் மடமையால் நகுதலும் பிறன் மடமையால் நகுதலும் என இரண்டாகும். இதுவே இளம்பூரணர் கருத்தும் என்பது. "எள்ளல் இளமை எனப் பொதுப்பட்டு நின்ற மையால் தன் மாட்டு நிகழும் வழியும் கொள்க' என்ற அவ ருடைய உரையால் அறியலாம். பேதைமை என்பதற்கும் மடம் என்பதற்கும் வேறுபாடு என்னையெனின், பேதைமை என்பது கேட்டதனை உணராது மெய்யாகக் கோடல் மடம் என்பது பொருண்மையறியாது திரியக் கோடல், இதனை ஐயுறாது நம்பும் இயல்பு என்று கூறலாம். சில எடுத்துக்காட்டுகளால் இக்கருத்துகள் தெளிவாகும்.

எள்ளல் பற்றி வரும் நகை: (1) தான் பிறர் குறை கண்டு அவரை இகழ்ந்து கூறி நகைப்பது.

தலைவி தன்னை இகழ்ந்து கூறினாள் என்று அறிகின்றாள் காதற் பரத்தை, உடனே தலைவியின் பாங்காயினார் கேட்பச் சில கூறுகின்றாள்.

'ஊரன்

எம்மிற் பெருவிழி கூறித் தம்மில்

கையும் காலும் தூக்கத் துக்கும்

ஆடிப் பாவை போல

மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே" என்று பரத்தை கூற்றாக வந்த குறுந்தொகைப் பாட்டில் (குறுந்.8) தலைவனைக் காதற் பரத்தை எம்முடைய வீட்டில் எம்மை