பக்கம்:பல்சுவை விருந்து.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் நகைச்சுவை 33

தலைவியைத் தோழி 'அவர் நம்மோடு நகையாடிச் சொன்னாரே யன்றி பிரிவர் அல்லர் என்று ஆறுதல் கூறுகின்றாள்.

கடுங்குரை யருமைய காடெணி னல்லது கொடுங்குழாய் துறக்குநர் அல்லர் நடுங்குதல் காண்பார் நகைகுறித் தனரே என்ற கலிப்பாட்டடிகளில் (கலி - 13) தோழி கூற்றாக வந்துள்ளது. இது தலைவன் தன் இளமைத் தன்மையால், பிறரை அஞ்சுவித்து நக்கதாகும்.

(2) பிறர் இளமை பற்றி வரும் நகை, தலைவியொருத்தி தன் அருமைக் குழந்தையை மடியில் வைத்து அவனுடைய தந்தையின் குறைகளைக் கூறி அவ்வாறே ஒழுகாதே என்றும், தந்தையின் நிறைகளைக் கூறி அவ்வாறு ஒழுகுவாயாக என்றும் கூறுகின்றாள். இந்நிலையில் பிரிந்து சென்ற 5೧೧೧)। தலைவியின் பின்புறம் வந்து மறைந்து நிற்கின்றான். தந்தை நிற்பதைக் குழந்தை பார்த்து விடுகின்றது. உடனே நகுகின்றது. பின் உண்மை உணர்ந்த தலைவி குழந்தையின் இளமைச் செயல் கண்டு தானும் நகைக்கின்றாள்.

திறனல்ல யாங்கழற யாரை நகும்.இம் மகனல்லான் பெற்ற மகன் என்ற தலைவியின் கூற்றாக வந்த கலிப்பாட்டடிகளில் (கலி - 86) தலைவி கூறி நகுவதை அறியலாகும். இங்ங்னம் மகன் சிரித்த வழித் தாய்க்கு நகை தோன்றியதால் அது குழந்தையின் இளமை கண்டு தாய் தக்கதாகும்.

பேதைமை பற்றி வரும் நகை: (1) ஒரு தலைவி தன் தாய் தன்னை வெகுண்டதன் நலத்தினைத் தன் பேதைமையால் உணர்ந்து, அதுபற்றி நகைக்கின்றாள்.

'நகைநீ கேளாய் தோழி'

என்ற அகப்பாட்டடியில் (அகம்-248) தலைவி தன் பேதைமைப் பொருளாக தாயின் உரை நலம் உணராது நக்குத் தோழிக்குக்