பக்கம்:பல்சுவை விருந்து.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8卓 பல்சுவை விருந்து

கூறியது. தான் செய்த தவற்றிற்குத் தாய் தன்னை வெகுண் டதைத் தனக்கு நகையாகக் கொண்டாள். (பேராசிரியர் இப் பாட்டைத் தலைவி கூற்றாகக் கொண்டதால் இப்பொருள் பிறந்தது).

(2) பிறன் பேதைமைபற்றி வரும் நகை: தலைவனைப் பரத்தையிடம் கூட்டுவிக்க நினைக்கும் பாணன் தன் வீட்டருகில் யாழ் வாசித்து விட்டு அவன் இல்லம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபொழுது ஈன்று அணிமையுடைய பசுவொன்று அவன்மீது பாய, அவன் அதற்கு அஞ்சித் தான் வைத்திருந்த யாழைத் தெருவிலே போட்டுவிட்டு ஓடி வந்து தன் மனையில் வந்து புகுந்ததையும் தான் அவனுக்கு மறுமாற்றம் அளித்த தையும் தலைவி தோழிக்குக் கூறுகின்றாள்.

நகையா கின்றே தோழி .....

தண்துறை ஊரன் திண்தார் அகலம் வதுவை நாளனிப் புதுவோர்ப் புணரிய பரிவொடு வரூஉம் பாணன் தெருவில் புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி யாழிட்டு எம்மனை புகுந்தோனே, அதுகண்டு மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென்று இம்மனை அன்றஃ தும்மனை என்ற என்னும் தன்னும் நோக்கி மம்மர் நெஞ்சினோன் தொழுதுநின் றதுவே. என்ற அகப்பாட்டுப் பகுதியில் (அகம்-56) தலைவியைக் கண்டு கலங்கித் தொழுது நிற்கும் பாணனைக் கண்டு தலைவி நகைக்கின்றாள். இதில் பாணனின் பேதைமை கண்டு தலைவி நகைத்துத் தோழிக்குக் கூறுவதைக் காணலாம்.

மடமை பற்றி வரும் நகை: (1). தலைவியொருத்தி தலைவனை நோக்கி, பண்டு நீ கூறியதை மெய்யாகக் கொண்டு யான் மகிழ்ந்தேனே, உன் கூற்றுப் பொய்யாதலை என்