பக்கம்:பல்சுவை விருந்து.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் நகைச்சுவை 85

மடமையால் அறியாது நகைத்தேனே. அங்ங்னம் நகைத்த பற்கள் அழிவனவாக' என்று வெறுத்துக் கூறுகின்றாள்.

சுரஞ்சொல் யானைக் கல்லுறு கோட்டில் தெற்றென இlஇயரோ ஐய! மற்றுயாம் நும்மொடு நக்க வால்வெள் எயிறே. என்ற குறுந்தொகையடிகளில் (குறுந்-169) தலைவியின் கூற்றால் இதனை அறியலாம். இந்நகை தோன்றிய பொழுது, தலைவி தன் மடத்தால் தலைவன் உரையை மெய்யெனக் கொண்டு நகைத்த நகையாகும்.

(2). பிறர் மடம் பொருளாக நகை தோன்றியது. தலைவன் ஒருவன் செல்லுதற்கரிய கடிய காட்டு வழியில் தன்னுடன் வர விரும்பும் தலைவியின் கருத்தைத் தோழியின் வாயிலாக அறிகின்றான்.

நாம்நகை யுடையம் நெஞ்சே நம்மொடு

தான்வரும் என்ப தடமென் தோளி என்ற அகப்பாட்டடிகளில் (அகம்-121) தலைவியின் மடமை நோக்கித் தன் நெஞ்சினிடத்தே கூறித் தலைவன் நக்கதை அறியலாம்.

சுவைகளின் நுட்பமனைத்தும் கண்ணாலும் செவியாலும் திட்பமாக அறியவல்ல நுண்ணறிவுடைய பெருமக்களுக்கே புலப்படும்; ஏனையோர்க்கு அஃது ஆராய்ந்தறிதற்கரியது. இதனைத் தொல்காப்பியர்,

கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின் நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே' என்று கூறுவர். ஒருவரது மனக்குறிப்பின் வழி அவர்தம் முகம் வேறுபடுதலும் மொழி வேறுபடுதலும் இயல்பாதலின்

18. தொல்.பொருள் மெய். நூற்பா, 27