பக்கம்:பல்சுவை விருந்து.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

பல்சுவை விருந்து

விடுதலை மோதிரம் சூடிய பின்போ விரல்கள் கூட

விலங்கு தரித்துள்ளன. வெள்ளைப் பூட்டுகள் வாய் பிளக்கையில் கறுப்புச் சங்கிலிகள் கைகளைப் பிணைத்தன.

நாம் - சொந்த வீட்டிலேயே வாடகைக்கு வசிப்பவர்கள்: அதனால் தான்

நம் சுதந்திரத்துக்குக் கொஞ்சம் சுவாசப் பைகளில் கோளாறு:

விலங்குகள் சுமந்து சுமந்தே

நம் -

விடுதலைக்கும் அடிமைப் பக்கவாதம்...

ரத்தாபிஷேகத்தில் சிலிர்க்க வேண்டிய சுதந்திர தேவி கித்தாப்பு வெளிச்சங்களில் கிறுகிறுத்துக் கிடக்கிறாள்...

பயணத்திற் கேற்றபடி பாதையா?... பாதைக் கேற்றபடி பயணமா?...