பக்கம்:பல்சுவை விருந்து.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பல்சுவை விருந்து

மேதினி திருத்துவோர்க்கே

என்ற

மெய்யுரிமை மலர்கின்றதோ...

என்றைக்கு இங்கே -

ஒலி பெருக்கிகளின்

ஒலத்தை விடவும்

ஆலைக் குழாய்கள்

ஆர்த்திடும் கர்ஜனை

ஆகாசமும் பூமியும்

வியாபிக்கிறதோ...

அன்றைக்கே

இந்நாட்டில்.

சமத்துவம் மணக்கும்

ஜனநாயகச் சுதந்திரம்

அமைத்திடும் திருநாள்!

எனறு -

அமையுமோ அந்த

இன்பத் திருநாள்!

இன்றைய நிலைமையை அற்புதமாகச் சித்திரிக்கின்றது இக் கவிதை, சிந்திக்காதவர்களையும் சிந்திக்க வைத்து விடுகின்றது. இத்தகைய கவிதைகள் மக்களிடையே ஓர் எழுச்சியை உண் டாக்கும் என்பதற்கு எள்ளளவும் ஐயம் இல்லை.

'சும்மா சொல்லிக்க..." என்ற தலைப்பில் ஒரு கவிதை. இதுவும் சுதந்திரத்தைப் பற்றியதுதான். இன்றைய நிலையில் பெரும்பாலோர் சுதந்திரம்' கிடைத்ததால் பயன் இல்லை என்றே கருதுகின்றனர். எங்கும் அமைதி இல்லை. அரசு ஊழல் களை அடக்குவதில்லை. சட்டஒழுங்கு சரியாக அமுல்படுத்துவதில்லை அரசு. இதனைப் பிரதிபலிப்பதாக அமைகின்றது கவிதை.

2. புதுக்கவிதை வெள்ளம் (சரிதா) - ஆன்ந்த விகடன் இதழ் 13.3.83