பக்கம்:பல்சுவை விருந்து.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ பல்சுவை விருந்து

பிள்ளைப் பிராயத்தில் -

ஆசை ஆசையாக

அழைத்த

பிஞ்சுக் கைகளுக்குப்

பிடிபடாமற் போன -

நிலா...

பிற்காலத்தில் -

ஆர்ம்ஸ்ட்ராங்கின்

அசுரக் கால்களால்

மிதிக்கப் பட்டது -

என்பதை மட்டும்

நீ மறந்து விடாதே! இந்தப் பாடலின் இறுதியில் பெருந்திணை ஒலி கேட்பது போல் தோன்றுகின்றது.

அண்மையில் ரோகிணி என்ற துணைக்கோள் பூரீஹரிக் கோட்டாவிலிருந்து விண்ணுக்குச் சென்று வட்டமிடுவதைக் கண்டுகளித்தோம். விண்மீனின் பெயராகிய ரோஹிணியின் பெயர் இந்தத் துணைக் கோளுக்கு இடப் பெற்றது ஒரு புதுக் கவிஞரைக் கவர்ந்திருக்கின்றது. ரோஹிணியே, உன்னைக் காதலிக்கிறேன்..." என்ற கவிதையில் அந்த ஆந்திர அறிவியல் நங்கையைக் காதலிக்கின்றார்.

ரோகிணி!.

அசுர வேகத்தில்

அகிலத்தை

அறிந்து கொள்வதற்காக

எங்களைச் சுற்றியே

வட்டமிடுபவளே...

உன்னைக் காதலிக்கின்றேன்!

5. ஜூனியர் ஆனந்த விகடன் 4.5.83ல் வெளிவந்தது (பம்மல் மணி மொழி)