பக்கம்:பல்சுவை விருந்து.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தற்போது நடக்கும் 'கிண்டியாத்திரையையும்' பற்றிக் குறிப் பிட்டு ஒப்புநோக்குகிறார். 'நீ எமர்ஜென்சி பூசாரிக்குத்தான் அடங்குவாயா' என விலைவாசியைப் பற்றிக் குறிப்பிடுகிறார். 'தன் குடலுக்குத் தானே தீ மூட்டிக் கொள்வதில் அப்படி என்ன போர்க்கால வேகமும் வெறித்தனமும்' என்ற வரிகளைப் படித்த பின்னரும் ஒருவனுக்குக் குடிக்கத் தோன்றுமா என்ன? விபசாரத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் 'கண்ணகி கல்யாண மண்டபக் கட்டிடத்திற்கு நிதி வசூல் செய்கிறேன்' என்றும், 'பரத்தைகள்' என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதை அடிகள், தரையிலே ஒடும் ரயில்கள் என்ற கவிதைத் தொகுப்பு இவற்றைத் தொகுத்து விபசாரம்' என்ற தலைப்பிலே எழுதியுள்ள ஆசிரியர், போனது போலீசார் மட்டும்தானா, தோளோடு தோள் இணைந்து நீதியும் நெடும் பயணம் போனது அவரோடு' என்று சொல்லப்பட்ட அடிகள், மாமூல் வாங்குவதை நாசூக்காகவும், நாகரிகமாகவும் குறிப்பிட்டுள்ளார். "அவர்கள் விடியலின் விரோதி கள், கல்யாணப் பந்தலில் நுழைய முடியாத நித்திய கல்யாணிகள், கண்ணீர் புத்திரிகள்' என்ற அடிகள், படிப் போரின் நெஞ்சத் தைப் பிழிய வைக்கின்றன. சமுதாயத்தோடு ஒட்டி வருகின்ற இந்தக் கவிதைகள் ஆசிரியரால் தொகுக்கப்பட்டு வெளி வந்திருப்பது உள்ளத்தை உருக வைக்கும் என்பதில் ஐயமில்லை.

ஒவ்வாமையைப் (Alergy) பல்வேறு கோணங்களில் சித் திரித்துப் பாமரர்களும் புரிந்து கொள்ளும் அளவிற்கு தொகுத்து தந்துள்ள ஆசிரியர் பாராட்டுக்குரியவர். உணவுப்பழக்க வழக் கங்கள் எவ்வாறு இருக்கவேண்டும், ஒவ்வாமை வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும். வந்திடின் கையாள வேண்டிய முறைகள் என்ன என்று தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

'வரலாறு எழுதுவது எப்படி என்று இக் கட்டுரையைப் படித்த பின் தெளிவடையவர்கள் ஏராளம். சிலர் எழுதும் வரலாறு, வரலாறாகவே இருப்பதில்லை என்பதும் மறுக்க இயலாத ஒன்று. வரலாற்றில் தான் எத்தனை வகை. தன் - வரலாறு, வாழ்க்கை வரலாறு, மொழி வரலாறு, இலக்கிய