பக்கம்:பல்சுவை விருந்து.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பல்சுவை விருந்து

ரோகிணிப் பெண்ணே!.

உன்னைக் காதலிப்பதை நான்

கெளரவமாய்

கருதுகிறேன்...

ரோகிணி கவிஞருக்கு அறிவியல் நங்கையாகத் தென்படு வதைக் கண்டு நாம் மகிழ்கின்றோம்.

ஆட்சிமுறை: கட்சி அரசியலில் ஜனநாயகம் வேரில் வெந்நீர் விட்டது போலாயிற்று. மாநிலத்துத் தலைமையமைச்சர் பதவி ஏலத்தில் போகின்றது; ஏனைய அமைச்சர்களின் பதவி யும் அப்படியே, முகத் துதியும் கைத்தாளமும் இவர்கள் சாமர்த்தியமாயின. இவர்களை ஒரு புதுக்கவிஞர் பொய்க்கால் குதிரைகளாகக் காட்டி நையாண்டி செய்கின்றார்.

தேசப் பிதா - தண்டியாத்திரை செய்ததுபோல்... எங்கள் தலைவர்கள் கிண்டி யாத்திரை செய்கிறார்கள்!

வண்டிக் குதிரைகள் வாய்ப்பூட்டோடு

நிற்க - கிண்டிக் குதிரைகளுக்குக் கிரீடங்கள் சூட்டப் படுகின்றன: பயணத்திற்குப் பயன் படாத

இந்தப் பந்தயக் குதிரைகளும் -

67#ñj&$£ï; இந்தியத் தலைவர்களும் ஓர் இனமே!