பக்கம்:பல்சுவை விருந்து.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுக்கவிதை - சமுதாய நோக்கில் 99

ஆம்.

தேர்தல் ஓட்டத்தில்...

இந்தத் தலைவர்கள் மீது

பந்தயம் கட்டியே -

கட்சித் தொண்டர்கள்

கைக்காசை

இழக்கின்றார்கள்!

இவர்கள் -

நிஜக் குதிரைகளல்ல!

மைய அரசின்

நையாண்டி மேளத்திற் கேற்ப.

பொது நடனம்

புரியும் - பொய்க்கால் குதிரைகள்!"

இவர்கள் பற்றிய கருத்து ஏற்கெனவே நம் மனத்தில் குடியேறியிருப்பதால் கவிஞர் இதனைத் தம் கவிதையில் ஏற்றி பவனி வரச் செய்யுங்கால் அது நம் அங்கீகாரம் பெறுகின்றது; இதனால் கவிதையும் சிறப்படைகின்றது.

விலைவாசி: இத்தலைப்பில் எத்தனை கவிதைகள் வேண்டு மானாலும் பிறக்கும். குடும்பக் கட்டுப்பாடு இங்கு இல்லை. விலை வாசி' என்ற தலைப்பில் ஒரு கவிதை,

விற்போரின்

முதலிரவு

வாங்குவோரின்

வயிற்றெரிச்சல்

ஆள்வோரின்

அனாதைகள்

எதிர்த் தரப்பின்

ஏக வாரிசுகள்.

6. வாலி: பொய்க்கால் குதிரைகள் - பக். 153 - 154, 7. கதம்பம் (முருகன்) பக். 25.