பக்கம்:பல்சுவை விருந்து.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுக்கவிதை - சமுதாய நோக்கில் 1 O3

ஏழு ஆயிரம்

இங்கே

சேர வாரும்

செகத் தீரே!'

பல ஆண்டுகட்கு முன்னர் இருந்த நிலையைக் காட்டுகின்றது கவிதை, பொருள்களின் விலைவாசி விண்ணை முட்டுவது போல் நுழைவு ரேட்டும் எல்லையின்றி ஏறி விட்டது. தகுதி உள்ள மாணவர்கள், ஏழை மாணவர்கள் உயர் கல்வி பெறுவது எப்படி இந்நிலையில்? நகைச்சுவை விளைவிக்கும் எள்ளல் குறிப்பு இங்கு ஊசி போல் குத்துகின்றது. கவிஞர் குத்துசியார் மரபில் வந்தவர் போலும்!

குடிப்பழக்கம்: இன்று இப்பழக்கம் பேயாய் ஆட்டி வைக் கின்றது. பெரிய பங்களாக்களில் வெளிநாட்டுச் சரக்குகள். குடிசைப் பகுதிகளில் உள்நாட்டுச் சரக்குகள் காந்தி அடிகள், இராஜாஜி போன்ற நாட்டுத்தலைவர்கள் காலத்தில் செய்யப் பெற்ற முயற்சியால் (பிரசாரத்தாலும் சட்டத்தாலும்) மது அரக்கன் தமிழகத்தில் ஒழிந்தான் சில ஆண்டுகட்கு முன் அவன் மீண்டும் தலையெடுப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. சுதந்திரத் திற்குப் பிறகு பிறந்த பல இளைஞர்கள் இப்பழக்கம் பற்றி அறிய வாய்ப்பு பெற்றனர். பொது மக்களின் எதிர்ப்புக் குரல் அரசின் செவிகட்கு எட்டியதும் மதுவிலக்கு சட்டம் மீண்டும் அமுலுக்கு வந்தது. திரும்பவும் ஆளும் கட்சியால் புதிய அரசு ஏற்பட்டதும் வருவாயைப் பெருக்க வேண்டும் என்ற கொள்கையை முன் வைத்து மதுவிலக்குச் சட்டம் ஒழிந்தது. 160 கோடி வெண் பொற்காசுகள் அரசுக் கருவூலத்திற்கு வருகின்றன. குடிப்ப வர்கள் ஏழைகள்; அவர்கள்தாம் இந்த வருமானத்தைத் தருகின் றனர். அவர்கள் தாம் வாக்குப் பதிவும் செய்கின்றனர். அதே

11. புதுக் கவிதை வெள்ளம் (திருவள்ளுர் இரா. சண்முகம்) - ஆனந்த விகடன் இதழ் 13.3.83