பக்கம்:பல்சுவை விருந்து.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுக்கவிதை - சமுதாய நோக்கில் 10了

கட்டடத்திற்கு

நிதி வசூல் செய்கிறேன் என்றாள்.

விபசாரத்தையே நியாயப்படுத்தும் கவிதை இது. கவிதையில் எள்ளல் குறிப்பு காணப்படுகின்றது.

'பரத்தைகள்' என்ற தலைப்பில் ஒரு கவிதை. பரத்தையர் தம்மைத் தாமே அறிமுகம் செய்து கொள்கின்றனர் இதில்.

நாங்கள் பொம்மைகள்

தொங்கவும் விடலாம்

தூக்கியும் நிறுத்தலாம்

எந்த இராத்திரியும்

எங்கட்கு நவராத்திரியே

நாங்கள் பொம்மைகள்.

கவிதையைப் படிக்கும் நம்மிடம் இவர்கள்மீது இரக்கம் பிறக்கின்றது. பொருளாதாரச் சீர்கேட்டுக்கு இரையானவர்கள் இவர்கள். இவர்கட்கு இத்தொழில் வாழ்க்கைப் பிரச்சினை. செல்வர்கட்கும் இளைஞர்கட்கும் இது காமக் களியாட்டம்.

'தரையிலே ஒடும் ரயில்கள்' என்ற தலைப்பில் "துறவி' யின் கவிதை ஓர் அற்புதப் படைப்பு: விபசாரம் பற்றிப் பச்சை யாக - ஆனால் நாசூக்காகத் - தெரிவிக்கும் ஒரு நல்ல புதுக் கவிதை. துறவி ஒரு விபசார புரோக்கரை அறிமுகம் செய்யும் பாங்கில் இந்தத் தொழில் சுறுசுறுப்பாக நடைபெறுவதைப் பாங் காகத் தெரிவிக்கின்றார். நடைபெறும் இடம் திருச்சி அருகில் காவிரி நதிப் பிரதேசம். புரோக்கர் பெயர் துரைக்கண்ணு. ஒரு பெளர்ணமி இரவில் அவனைச் சந்திக்கின்றார். அவனைப் பற்றி:

அவனோர்

தனி மனிதனல்ல...

அவனுள்

13. கதம்பம் (மினிக் கவிதைத் தொகுப்பு) - பக். 34. 14. புதுக்கவிதை வெள்ளம் (துறவி) - ஆனந்த விகடன் இதழ் 13.3.83