பக்கம்:பல்சுவை விருந்து.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 10 பல்சுவை விருந்து

எங்கள் மூச்சுகளுக்கு

இந்தப் பிரபஞ்சம்

காற்றை வழங்கலாம்;

ஆனால்

வயிறுகளுக்கு

எந்தக் கரங்கள்

பிடிச் சோற்றைப்

பிரியமாய்த் தருகின்றன?

இந்தத் தேசத்தின்

சட்டங்கள் யாவும்

பனக் காரனின்

வீட்டுக்கு

மாடிப் படிகளாய்

மாறிப் போய் விட்டன:

ஆனால்

எங்களுக்கோ

శొ6%షిi

எங்களது

பொத்தல் குடிசைகளில்

புயல்களாகவே

புகுந்து விடுகின்றன!

நெருப்புப் பொறி பறக்கும் இந்த புரோக்கரின் பேச்சில் துறவியின் ஆன்மா கூட ஆச்சரியத்தில் அமிழ்ந்து போகின்றது. அவர் இதயம் அசிங்கத்தால் குமட்டுகின்றது.

இந்த தேசத்தின்

புண்ணிய புஸ்தகங்கள்

போற்றிப் பேசும்

பெண்மைகள் இப்படி

ராத்திரியின் பின்னணியில்

இவ்வளவு பகிரங்கமாய்