பக்கம்:பல்சுவை விருந்து.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. i2 பல்சுவை விருந்து

அசிங்கத்தைப் பற்றிய

அக்கறை?” இந்த மறு மொழியைச் செவிமடுத்த கவிஞரின் சிந்தனை,

உடம்புகள் அழகாய்

இருக்கும்

ஒவ்வொரு மனிதனுக்கும்

ஆத்மா மட்டும்

அழுக்காகவே இருக்கிறது.

வெளிச்சத்தில்

தெரியும் மனிதனுக்கும்

இருட்டுக்குள்

நிற்கும் மனிதனுக்கும்

இடையில்தான்

எத்தனை வித்தியாசங்கள்! என்று நெசவு செய்கின்றது. இந்த நிலையில் இருட்டைக் கீறி வெளிப்படுத்துவது போல் நான்கைந்து வெள்ளைச் சட்டைகள் அந்தக் குழாய்களின் பக்கமிருந்து குதூகலத்துடன் வெளிவரு கின்றன. கவிஞர் இக்காட்சியை உற்று நோக்குகின்றார்.'

பூரண நிலாவின்

பொற்கதிர் வெளிச்சத்தில்

அவிழ்ந்து சரிந்துபோன

தங்களின்

ஆடைகளைச் சரிசெய்து

நிற்கும்

அந்த

இரவு மயில்களின்

15. கவிதை முழுவதுமே மீமெய்ம்மையியலுக்குச் சரியான எடுத்துக் காட்டானாலும் இதற்குக் கீழ்உள்ள பகுதி - மிகச் சிறப்பாக அமைகின்றது.