பக்கம்:பல்சுவை விருந்து.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுக்கவிதை - சமுதாய நோக்கில் 115

அச்சுறுத்தல்கள்

இல்லாமலே

வாழ்க்கை வண்டியை

ஒட்ட முடிகிறதே

அதுவே போதும் சார்...'

ஒரு தத்துவ ஞானிபோல் இவ்வாறு கூறி தன் பேச்சை நிறுத்துகின்றான். அவன் பேசியது இந்த தேசத்தின் முகத்தில் காறித்துப்பியது போல் தோன்றுகின்றது கவிஞருக்கு. உடனே சிந்திக்கத் தொடங்குகின்றார். அந்தச் சிந்தனை யோட்டம்:

அந்தப் பிரஜைகளின்

பிய்ந்து போன

இதயத்தைத் தைப்பதற்கு

இந்த

சமூகம் எதைத்தான்

சாதித்தது!

அவர்கள்

தங்களின் விரல்களுக்குத்

தங்க மோதிரங்களை

வேண்டியா

தவங்கள் செய்கிறார்கள்?

இல்லையே...

நீண்டு வளர்ந்து

தங்களையே காயப்படுத்தும்

விரல்களின் நகத்தை

வெட்டி எறியவே

பிரயாசைப் படுகிறார்கள்.

ஆனால்

கைகளையே இழந்துவிடும்

கண்ணி அநுபவங்களே

நேர்ந்து விடுகிறது

அவர்களுக்கு: