பக்கம்:பல்சுவை விருந்து.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பல்சுவை விருந்து

இந்தப் பாரததேசத்து

ஒவ்வொரு பிரஜையும்

காயமாகிப் போய்க்

கண்ணி வடிக்கிறான்.

ஆத்மாவையே இழந்துவிட்ட

அரசியல் வாதிகளினால்:

ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின்

விழிகளுக்குள்

அக்கினி நதிகள்

ஆரம்பிக்காத வரைக்கும்

இந்த

நீசங்களை நிர்மூலமாக்க

எப்படிக் கிடைக்கும்

நெருப்புகள்?

வறுமை. இதனை நிலைபேறு அடையச் செய்தவர்கள் அரசியல் வாதிகள் என்பதை அனைவரும் ஒருமித்த குரலோடு பேசுகின்றார்கள்.

இப்படி ஒரு கவிதை:

வறுமையே!

எங்கள் தேசத்து

அரசியல் வாதிகள்

வாங்கித் தந்த

வரப் பிரசாதமே

18 و

என்று தொடங்குகின்றது. இந்த அரசியல் வாதிகள் தொண்டர்கள் போல் நன்கு நடித்து வணிகர்கள்போல் பேரம் பேசுவதைக் கவிஞர் அம்பலப் படுத்துகின்றார்.

வறுமையை மூலதனமாக்கிக் கொண்டு பலர் வாழ்வதையும் கவிஞர் ஒருவர் சுட்டிக் காட்டுகின்றார் அற்புதமாக,

வறுமையின் தத்துவம் சமய் வாதிகளுக்கு

16. அரண்மனை திராட்சைகள்