பக்கம்:பல்சுவை விருந்து.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$22 பல்சுவை விருந்து

ஒவ்வாமையின் சாதாரணத் தோற்றங்களாகக் காச நோய், து.சியினால் ஏற்படும் வேனிற் காலக் காய்ச்சல் (Hay-fever), ஆண்டு முழுவதும் தொடர்ந்து நிலை பெற்றிருக்கும் மூக்குச் சார்ந்த ஒவ்வாமை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவை தவிர படை நோய், தோல் வீக்கம், குடல் வீக்கம், தொண்டை அழற்சி முதலியவை, ஒவ்வாமைத் தலைநோய், ஒவ்வாமையுள்ள செரி மானக் கோளாறுகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். கிட்டத் தட்ட எல்லா மக்களும் ஏதாவது ஒரு பொருளுக்கு ஒவ்வாமை யுடையவர்கள். இரண்டாம் உலகப் பெரும் போரில் ஒருவர் காக்கி ஆடைக்கு ஒவ்வாமையாக இருந்தமையால், பணியி லிருந்து விடுதலை அளிக்கப் பெற்றாராம். பீட்டர் பர்க்கிலுள்ள நங்கையொருத்தியின் அங்கோரா கம்பளிக் குல்லாய் அவரது ஆண் நண்பருக்கு ஒவ்வாமையாக இருந்தமையால் இதனை விற்க விளம்பரம் செய்தாளாம். ஒருவருக்கு எல்லா வித வண்ணங்களும் தும்மலை விளைவித்ததாம். கலிஃபோர்னி யாவில் ஒரு பெண்மணிக்குத் தன் கணவன் ஒவ்வாமையாக இருந்தானாம் உண்மையில் அவள் கணவனிடம் பேரன்பு கொண்டவுளே. ஆனால் அவன் நேரில் இருக்கும்பொழுது அவனைப்பற்றி யாராவது பேச்சு எடுத்தாலும் - அவள் நிலை குலைந்து உடம்பெல்லாம் தடித்துவிடுமாம். அவள் காச நோயி னால் பீடிக்கப் பெற்றுக் குணம் அடைந்தவள். இவையெல்லாம் ஒவ்வாமை விநோதங்கள்.

களைப்புத் தலைவலி (Migraine): இதனை ஓர் ஒவ்வாமை நிலையாக அறிஞர் பலர் கருதுகின்றனர். இதனை ஒருதலைவலி என்றும் சொல்லலாம். தலையிலுள்ள குருதிச் சூழல்கள் அடிக்கடி வீங்குவதால் இஃது ஏற்படுகின்றது. இஃது ஓங்கி நிற்கும் ஜீனினால் (Dominant gene) நேரிடுகின்றது. ஹார்மோன்களின் செல்வாக்கும் இதற்கு உண்டு. பெரும்பாலும் மகளிர் மாதவிடாயின் பொழுது இந்நோயினால் அதிகமாகத் துன்புறுகின்றனர்.

ஒவ்வாமை நிலையை ஏற்படுத்தும் பொருள்கள்: ஒவ்வாமை நிலையை ஏற்படுத்தும் பொருள்கள் இப்பெயர்