பக்கம்:பல்சுவை விருந்து.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 பல்சுவை விருந்து

ஏற்படுத்தும் பொருள் அல்லது பொருள்கட்கு உட்படுத்தப் பெறும் பொழுது அஃது எதிர்வினை புரிகின்றது. இப்பொருள் அந்த உடலைத் துண்டி எதிர்ப்பொருள்கள்" (Antibody) என்ற புரதங்களை விளைவிக்கின்றது. ஒவ்வாநிலைப் பொருள்களும் இந்த எதிர்ப் பொருள்களும் இணைந்து உடலின் உயிரணுக்களி லிருந்து சில பொருள்களை குருதியுள்ளும் மற்ற உடல் பாகங் களுக்குள்ளும் விடுவிக்கின்றன. இந்தப் பொருள்கள் Hபொருள்கள் என்ற பெயரினைப் பெறுகின்றன; இவை வேறு உயிரணுக்களிலும் இழையங்களிலும் எதிர்வினைகளை விளை விக்கின்றன. இந்த H-பொருள்களில் பல பிராணிகளிடமும் மனிதர்களிடமும் விளைவிக்கின்றன. மனிதர்களிடம் ஒவ்வா மையை விளைவிக்கும் முக்கியமான H-பொருள் ஹிஸ்டாமின் (Histamine) arol giró5th.

உடலுக்குள் விடுவிக்கப் பெற்ற H-பொருள்கள் ஒவ்வா மைக்கு இலக்காகவுள்ள இழையங்களைத் தாக்குகின்றன. பெரும்பான்மையான இந்த இழையங்கள் நுண்புழைகள், (Capileries) சளிச்சுரப்பிகள், மென்மையான தசைகள் (இதயத்தைத் தவிர இரைப்பை மற்றுமுள்ள உள்ளுறுப்புகளின் தசைகள்) ஆகியவையாகும். உடலிலுள்ள இந்த இழையங்களின் இடம் H-பொருள்கட்கேற்ப அவற்றின் குறிப்பிட்ட துலங்க லுடன் - தெளிவாகக் குறிப்பிட்ட ஒவ்வாமை நோயை உறுதி செய்கின்றது. பொதுவாக ஹிஸ்டாமின் நுண் புழையங்களைப் பெரிதாக்குகின்றது. சளிச் சுரப்பிகளைச் சுரக்கச் செய்கின்றது; மென்மையான தசைகளை இறுக்கமடையச் செய்கிறது.

ஒரு குறிப்பிட்ட ஒவ்வாமைப் பொருளின் துலக்கத்திற் கேற்ப ஒருவருடைய உடலில் எதிர்ப் பொருள்கள் உண்டாக்கப் பெற்ற பிறகு, எதிர்காலத்தில் இந்த எதிர்ப் பொருள்கட்கு உடல் இலக்காகும்போது அஃது எதிர்ப் பொருள்களின் உற்பத்தியைத்

5. இவை குருதியில் இருந்து கொண்டு உடலை நோய்கள் தாக்காமல் காப்பாற்றுகின்றன.