பக்கம்:பல்சுவை விருந்து.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒவ்வாமை நிலை 125

துண்டுகின்றது. ஆனால் இத்தகைய எதிர்ப் பொருள்கள் ஒருவ ருடைய உடல் உண்டாக்கும் தொற்றுவுடன் போராடிப் பாது காக்கும் எதிர்ப் பொருள்களைப்போல் செயற்படுவதில்லை. பாதுகாக்கும் எதிர்ப்பொருள்கள் நோயை விளைவிக்கும் உயிரிகளுடன் போராடி அவற்றை அழிக்கின்றன; அல்லது அவற்றைத் தீங்கற்றவையாக்குகின்றன. இந்த உயிரிகள் அழிக்கப் பெற்ற பின்னர் உடல் இத்தகைய எதிர்ப் பொருள் களைத் தொடர்ந்து உண்டாக்குமேயானால் அந்த ஆள் தடுப்பாற்றலையுடையவராகின்றார்.

மனவெழுச்சிக் கூறுகள்: ஒவ்வாமை இலக்கு இழையங்கள் தன்னாட்சி நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருப்ப தால், ஒவ்வாமைப் பொருளின் - எதிர்ப்பொருள் எதிர்வினை ஒவ்வாமை நிலையை விளக்க முடிவதில்லை. தன்னாட்சி நரம்பு மண்டலம் இந்த இழையங்களை அடிப்படையில் ஒழுங்கான சம நிலையில் வைத்துப் பாதுகாக்கின்றது. ஆனால் தன்னாட்சி நரம்பு மண்டலம் மனவெழுச்சிகள் போன்ற மற்ற உடல் துலங்க ளுடன் அடங்கியிருக்கின்றது. இதனால் தீவிரமான மன வெழுச்சிகள் கூட ஒவ்வாமை இலக்கான இழையத்தின் எதிர் வினையைத் தாக்குகின்றன. சினம், அச்சம், மனக்கசப்பு (Resentment), தொந்தரவு, தன்னம்பிக்கை இல்லாமை போன்ற மனவெழுச்சி வகைகள் ஒவ்வாமைத் துலங்கல்களைப் பெருகச் செய்கின்றன.

மூளையிலுள்ள நரம்பு மையங்கள் மனவெழுச்சித் துலங்கல்க ளுடன் பங்கு பெறுகின்றன. மேற்பூத்தண்டு (Hypothalamus) எனப்படும் மூளையின் ஒரு பகுதி தன்னாட்சி நரம்பு மண்ட லத்தைத் தணிக்கை செய்து கட்டுப்படுத்துகின்றது. மேற்பூத் தண்டும் அடுத்து பெருமூளையின் மேலுறையினால் (Celeb: cortex) தூண்டப் பெறுகின்றது. சில துண்டல்கள். காணலாலு கேட்பதாலும், மூளையை அடையும் பொழுது ஒரு செய்தி மூளையின் மேலுறையில் முறைப்படுத்தப் பெறுகின்றது. அந்தச் செய்தி ஏதாவது மனவெழுச்சித் துலங்கல்களை விளைவிக்கக்

1.1.5 - 10